கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஷ்ணுபிரியா வழக்கு: சி.பி.ஐ., தரப்புக்கு நீதிபதி கேள்வி

Added : டிச 07, 2018
Advertisement

கோவை:டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை செய்வதற்கு முன், அவருடன், எஸ்.பி., என்ன பேசினார் என்பது குறித்து, நீதிபதியின் கேள்விக்கு, சி.பி.ஐ., வக்கீல் உரிய பதில் அளிக்காததால், வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ், 23, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருச்செங்கோடு, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, 2015, செப்., 8ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக, விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை ரவி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கோவை, சி.ஜே.எம்., நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த, சி.பி.ஐ., 'புகாரில் போதிய ஆதாரம் இல்லாததால், வழக்கு கைவிடப்படுகிறது' என, தெரிவித்தது. சி.பி.ஐ., அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரவி தரப்பு வக்கீல் அருள்மொழி மனு தாக்கல் செய்தார். இதற்கு, சி.பி.ஐ., பதில் மனு தாக்கல் செய்தது.இம்மனுக்கள் மீது, இரு தரப்பு வக்கீல் வாதம், நீதிபதி நாகராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது.

சி,பி.ஐ., தரப்பில் ஆஜரான பெண் வக்கீல், ஷாய்பா வாதிட்டதாவது:விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு, எஸ்.பி., செந்தில்குமார் தான் காரணம் என்று, கடிதத்தில் குறிப்பிட வில்லை. சொந்த காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து உள்ளார். ஐ.ஏ.எஸ்., தேர்வில் தோல்வி, உடல் பருமன், தனிமையில் இருப்பது போன்ற காரணங்களால் தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, எஸ்.பி., போனில் பேசியுள்ளார். அப்போது, விஷ்ணுபிரியா எப்போதும் போல சகஜமாக பேசியிருக்கிறார். இவ்வாறு ஷாய்பா வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'சம்பவம் நடந்த அன்று, விஷ்ணுபியாவுடன், எஸ்.பி., பேசியதாக சொல்கிறீர்கள். ஆனால், சி.பி.ஐ., அறிக்கையில் அது பற்றி, குறிப்பிடவில்லை. 'விஷ்ணுபிரியா வுடன் என்ன பேசினார் என்பதை, எஸ்.பி.,யிடம் விசாரித்து வாக்குமூலம் பெறாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு, சி.பி.ஐ., வக்கீல், அறிக்கை நகலை சில நிமிடங்கள் மவுனமாக புரட்டி பார்த்துவிட்டு, நீதிபதி கேள்விக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

ரவி தரப்பு வக்கீல், அருள் மொழி வாதிட்ட தாவது: சி.பி.ஐ., தனியாக விசாரணை நடத்தாமல், சி.பி., - சி.ஐ.டி., அளித்த அறிக்கையை அப்படியே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தனிப்பட்ட காரணத்தால், விஷ்ணுபிரியா தற்கொலை செய்யவில்லை. எஸ்.பி., செந்தில்குமார் டார்ச்சர் காரணமாக தான், தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.இது பற்றிய உண்மையை நீதிமன்றத்தில், சொல்வதற்கு விரும்புவதாக, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், ரவியிடம் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் விஷ்ணுபிரியாவின் பெற்றோரை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து சாட்சியம் பெற வேண்டும். தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி,தீர்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இறுதி உத்தரவுக்காக, வரும், 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X