சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் தகராறு 4 பேர் மீது வழக்கு

Added : டிச 07, 2018
Advertisement

மானாமதுரை:மானாமதுரையில் டீக்கடை கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார்.4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மானாமதுரை நியூ வசந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் துாதை ஆறுமுகம்.இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தை டீக்கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.அந்த டீக்கடைகாரர் கழிவு நீரை நியூ வசந்தநகர் செல்லும் பாதையில் கொட்டியுள்ளார்.இதனை அதே பகுதியைச் சேர்ந்த சோணைமுத்து மகன் நாகராஜ் தட்டிக்கேட்ட போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து நாகராஜ் மானாமதுரை அ.தி.மு.க.,அலுவலகம் அருகில் நின்ற போது அங்கு வந்த துாதை ஆறுமுகம் அவரது மனைவி அமிர்தம்,மகன் வெங்கடேஷ்,மற்றும் உறவினர் கண்ணதாசன் ஆகியோர் நாகராஜை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.காயமடைந்த நாகராஜ் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X