தமிழ்நாடு

மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது! இயற்கை சீற்றங்களால் சுற்றுலா இயக்கம் பாதிப்பு

Updated : டிச 08, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (4)
Share
Advertisement
மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை  குறைந்தது! இயற்கை சீற்றங்களால் சுற்றுலா இயக்கம் பாதிப்பு

மதுரை:மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால், அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்தாண்டு டிச.,ல் 42,000 வெளிநாட்டு பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர்.

இவர்களின் பயணங்களில் கேரளா முக்கிய இடம்பெற்றுள்ளது. இந்தாண்டு கேரளாவில் வெள்ள பாதிப்புகளின் எதிரொலியாக சுற்றுலா பயணிகளின் முன்பதிவுகள் பெரிதும் குறைந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர் ஏமாற்றத்தில் உள்ளனர்.மதுரையில் 3,000 சுற்றுலா வாகனங்கள் உள்ளன. சுற்றுலா வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் சங்கம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்களை சார்ந்து 500 க்கும் மேற்பட்டோர் இதனால் பயன்பெறுகின்றனர். டிசம்பர், ஜனவரியில் களைகட்டும் வெளிநாட்டு சுற்றுலா தற்போது 'டல்' ஆக உள்ளதால் இதனை சார்ந்த கடைகள், உணவகங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கூறியதாவது:மதுரையில் இருந்து தேக்கடிக்கு அதிகமான வெளிநாட்டு பயணிகள் சென்று அங்கிருந்து ஆலப்புழாவுக்கு செல்கின்றனர். மூணாறு, கொடைக்கானல் பகுதிக்கு குறைவாகவே செல்கின்றனர். கேரளாவில் வெள்ள சேதம் சீராகி உள்ளது. ஆனாலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் இல்லை. சில ஆண்டுகளாக கடும் வறட்சியாக இருந்த போதும் டிச.,ல் அதிகமானோர் வந்தனர். இப்போது நல்ல காலநிலை இருந்தும் சீசன் மந்தமாக உள்ளது, என்றனர்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது:டிச., 15 க்கு பின் தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும். இந்த ஆண்டும் வழக்கம் போல் எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாவிற்கு ஏற்ற காலநிலை நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கான தடைகள் கடந்தாண்டே நீங்கியுள்ளதால் ஜன.,ல் அதிகமான பயணிகள் வருவார்கள். கேரளாவில் வெள்ள பாதிப்பு காரணமாக மாற்று திட்டங்களோடு வெளிநாட்டினர் வருவார்கள், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
08-டிச-201803:00:37 IST Report Abuse
Subramaniam ஹோட்டல் நிர்வாகிகளும் வாடகை கார் உரிமையாளர்களும் டிரைவர்களும் சுற்றுலா பயணிகளை ஏமாற்ற செய்யும் சூழ்ச்சிகள் சகிக்க முடியாதவை. இதைவிட ஏசி போடாமல் பெட்ரோல் சேமிப்பதும் அடிக்கடி காரி துப்பிக்கொண்டிருப்பதும் இரவில் குடித்து விட்டு காரினுள் வாந்தி எடுக்கும் சுகாதாரமற்ற பயணிகளை மதிக்க தெரியாத டிரைவர்களை களை எடுப்பது நன்று.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:12:56 IST Report Abuse
Bhaskaran எதற்கவய்யா கும்பகோணத்தில் வெளிமாநில பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்தும் எப்படி வெளிநாட்டவர் வருவார்கள் முதலில் அவர்கள் பாதுகாப்பு முக்கியமே ஒருகுடம் paaalil ஒருதுளி விஷம் போருமே
Rate this:
Share this comment
Cancel
Madhu -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201811:31:49 IST Report Abuse
Madhu India is becoming high risk country for foreigners. Law breakers are not punished ever. We are ruining our own history. Government and officials are the cause for it. Why this bad fate has come to this country, in hands of worst politicians than moguls and Britishers ruined us.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X