கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பொது செயலர் தேர்வுக்கு உத்தரவிடக்கோரிய மனு ஒத்திவைப்பு

Added : டிச 07, 2018
Advertisement

மதுரை:அ.தி.மு.க.,விற்கு புதிய பொதுச் செயலரை தேர்வு செய்ய, உத்தரவிடக்கோரி தாக்கலான மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

திருச்செந்துார் ராம்குமார் ஆதித்யன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:நான், அ.தி.மு.க., உறுப்பினர். அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா, 2016 டிச.,5ல் மறைந்தார். மதுசூதனன் தலைமையில், 2016 டிச., 29ல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கட்சியின் சட்டம், விதிகளுக்குப் புறம்பாக, சசிகலா தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.அவர், தினகரனை துணைப் பொதுச் செயல ராக நியமித்தார்.

சசிகலாவை பொதுச் செயலராக தேர்வு செய்ததற்கு எதிராக நான், மதுசூதனன் மற்றும் மைத்ரேயன், கே.சி.பழனிசாமி தேர்தல் கமிஷனில் மனு அளித்தோம்.முறையாக இல்லாத அழைப்பிதழ் அடிப்படையில், 2017 செப்., 12ல், நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலர் பதவியிலிருந்து, சசிகலா நீக்கப்பட்டார். பொதுச் செயலர் பதவி ரத்து செய்யப்பட்டது. புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் தலைமையிலான அணிக்கு, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை, 2017 நவ.,23 ல் தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.பொதுச் செயலர் பதவியை ரத்து செய்தது, கட்சி விதிமுறைகளை மீறிய செயல். 2016 டிச., 29 மற்றும் 2017 செப்., 12ல் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது என, ரத்து செய்ய வேண்டும். பொதுச் செயலரை தேர்வு செய்ய, அ.தி.மு.க.,விற்கு உத்தரவிட வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இம்மனுவிற்கு, பிரதான எண் இடப்படாத நிலையில், விசாரணைக்கு ஏற்புடையதா என, முடிவு செய்ய, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்னிலையில் பட்டியலிடப்பட்டது. நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X