சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவனுடன் தலைமறைவான கல்லூரி ஆசிரியை சரண்

Added : டிச 07, 2018
Advertisement

நாகர்கோவில்:திருமணமான, இரண்டு வாரங்களில், மாணவனுடன் தலைமறைவான கல்லுாரி ஆசிரியை, நேற்று போலீசில் சரணடைந்தார்.

கன்னியாகுமரி அருகேயுள்ள தனியார் கல்லுாரியின் ஆசிரியை, 24 ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இரு வாரங்களுக்கு முன் திருமணம் நடந்தது.தான் வேறொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோர் வற்புறுத்தி திருமணம் முடித்ததாகவும், முதலிரவில், மணமகனிடம் ஆசிரியை கூறினார். அதிர்ச்சியடைந்த மணமகன், பெண்ணின் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்து சென்றார்.இரண்டு வாரங்கள் கழித்து, ஆசிரியை மாயமானார்.

போலீஸ் விசாரணையில், ஆசிரியை பணிபுரியும் கல்லுாரியில் படிக்கும், 20 வயது மாணவர் ஒருவருடன் காதல் இருந்ததும், அவருடன் தலைமறைவானதும் உறுதியானது.அவர்களை தேடி வந்த நிலையில், இருவரும் நேற்று, கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். ஆசிரியையின் பெற்றோர் மற்றும் அவரது கணவரை வரவழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர்.

அப்போது, 'எங்களால் காதலை மறக்க முடியவில்லை; பிரித்து விடாதீர்கள்' என, இருவரும், போலீசாரிடம் கெஞ்சினர். 'சட்டப்படி அதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறி, ஆசிரி யையை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X