கோர்ட் செய்தி

தமிழ்நாடு

துரைமுருகனுக்கு, 'பாஸ்போர்ட்'

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:தி.மு.க., பொருளாளர் துரைமுருகனின், 'பாஸ்போர்ட்' கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து,உத்தரவு பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரைமுருகன் தாக்கல் செய்த மனு:எனக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட், ௨௦௨௩ அக்டோபர் வரை செல்லத்தக்கது. பாஸ்போர்ட் பக்கங்கள் காலியாகி விட்டதால், மறுபடி வழங்கும்படி விண்ணப்பித்தேன்.அதை, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திருப்பி அனுப்பி விட்டார். எனக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியதை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. துரைமுருகன் சார்பில், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், ''உலக நாடுகளில் உள்ள தமிழர்கள், நிகழ்ச்சி களில் பேச அழைத்துள்ளனர்.

போலீஸ் அறிக்கையை மட்டும் வைத்து, விண்ணப்பத்தை நிராகரித்தது சரியல்ல; அது, சட்டவிரோதமானது,'' என்றார்.மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சார்பில், வழக்கறிஞர் ஏ.முருகன் ஆஜராகி, ''மனுதாரருக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதனால், விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான்,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு எதிரான கிரிமினல் வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதற்கு, எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை நிலுவையில் இருப்பதை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக, எடுத்துக் கொள்ள முடியாது.சொத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நிலுவையில் இருந்தாலும், அது, மனுதாரருக்கு எதிரானது எனக்கூற முடியாது.

'வெளிநாடுகளுக்கு பயணிப்பது, ஒருவரின் அடிப்படை உரிமை; பாஸ்போர்ட் மறுப்பது, அடிப்படை உரிமை மீறல்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனவும், கோரியுள்ளார். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்தது, ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பத்தை பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள், உரிய உத்தரவை, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
07-டிச-201810:22:59 IST Report Abuse
Chanemougam Ramachandirane கிரிமினல் வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதற்கு, எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. என்றல் முதலில் தாக்கல் செய்ய சொல்லவேண்டியது தானே இல்லை என்றல் வசக்கை தொடுக்கும் போஸுது ஆவணங்கள் இல்லாமல் வசக்கை தொடுக்கமுடியாது என்று பதிவு துறைக்கு இதுவரை உயர், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தமியால் பல வசகுகள் நீதிமன்றத்தின் நேரத்தை பணியை அரசு அதிகாரிகள் தவறினால் வீணாகிறது ஆகையால் முதலில் நீதிமன்றங்கள் வாசக்கு தொடுக்கும் முன் சிவில் கிரிமினல் எந்த வசகாக இருந்தாலும் முதலில்ஆவணங்களை ஆய்வு செய்ய தனி குஸுவை நீதிமன்றத்தில் ஏற்படுத்தி குஸு பரிந்துரையின் பேரில் பதிவு செய்து வசக்கை நீதிமன்றம் நடத்தணும் என்று முதலில் வரையருங்கள் தேவையில்லாத வசகுகள் குறையும் எல்லாருக்கும் விரைவில் நீதி கிடைக்கும் ஊடகங்கள் கேள்வி கேட்கணும் வெளிப்படுத்தனும் நீதிமன்றத்திற்கு நடைமுறை படுத்த அமுலுக்கு வரும் வரை அறிவுறுத்தணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X