அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவர்சட்டசபையில் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

Added : டிச 07, 2018
Advertisement

சென்னை:''காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்,'' என, எதிர்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.
மேகதாது அணை தொடர்பாக, சட்டசபையின் சிறப்பு கூட்டம், நேற்று நடந்தது.அப்போது, எதிர்கட்சி தலைவர்கள் பேசியதாவது:எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: காவிரி மேலாண்மை ஆணையம்,ஒன்பது பேர் இடம் பெற்ற அமைப்பாக உள்ளது. இதில், மத்திய அரசு, மாநில அரசுகளின் சார்பில், தலா, நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருப்பவர், காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் உள்ளார். காவிரி ஆணையத்திற்கு, 'பார்ட் டைம்' தலைவர் இருக்கிறாரே தவிர, நிரந்தர தலைவர் நியமிக்கப்படவில்லை.இரண்டுக்கும், ஒரே அதிகாரி என்பதால், இன்றைக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. அணை கட்ட, கர்நாடகாவிற்கு அனுமதி கொடுத்து விட்டு, 'ஆணையத்தை கேட்காமல் அணை கட்ட முடியாது' என, தலைவர் கூறுகிறார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆணையத்தை, மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ள முழு நேர தலைவரை நியமிக்க, ஆறு மாதங்களாக தமிழக அரசும், முதல்வரும் வலியுறுத்தாதது ஏன்.

காங்., தலைவர் - ராமசாமி:

தண்ணீர் பற்றாக்குறையால், இரண்டு மாநிலங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அதே போல, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அணையை கட்ட, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதன் தலைவராக உள்ளவர் தான், காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் உள்ளார். இது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - அபுபக்கர்:

மேகதாது அணைக்கு அனுமதி வழங்கிய வகையில், தமிழகத்தை, மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறதா என்ற, சந்தேகம் எழுகிறது.இப்பிரச்னை தொடர்பாக, இதே சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில், பிரதமரை சந்திப்பது என, தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானங்கள் என்னவானது என, தெரியவில்லை.இ வ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X