சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று மதுரவாயல் வீடு சென்ற வனிதா

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

மதுரவாயல்:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, நேற்று தன் மதுரவாயல் வீட்டிற்குள் சென்றார்.சென்னை, மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவில், நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு உள்ளது.

இந்த வீட்டை, படங்கள் மற்றும் சீரியல் எடுக்க, வாடகைக்கு விட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன், விஜயகுமாரின் மகள் வனிதா, படம் எடுப்பதற்காக, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார். படப்பிடிப்பு முடிந்த பின், வீட்டை காலி செய்யாமல், அங்கேயே வசித்து வந்தார்.இதுகுறித்து, மதுரவாயல் காவல் நிலையத்திலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், செப்., 19ல், விஜயகுமார் புகார் அளித்தார்.

போலீசார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை, அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர். அப்போது, தகராறில் ஈடுபட்ட வனிதாவின் நண்பர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், வனிதா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இதனால், நேற்று காலை, தன் வழக்கறிஞர்களுடன், மதுரவாயல் வீட்டிற்குள், வனிதா சென்றார்.அப்போது, வனிதா கூறியதாவது:என் அம்மா பெயரில் உள்ள, இந்த வீட்டிலிருந்து, இரண்டு மாதங்களுக்கு முன், போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.

இந்த வீடு, நான் நடித்த பணத்தில் வாங்கியது. இதில், என் இரண்டு சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. நான் நியாயம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்தேன்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், எனக்கு உரிமையான இந்த வீட்டில் வசிக்க, யாரும் இடையூறு செய்யக்கூடாது என்றும், தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் நகல்களை, மதுரவாயல் காவல் நிலையம், போலீஸ் கமிஷனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:25:15 IST Report Abuse
Bhaskaran ராஜ்கிரண் ராமராஜன் போன்ற கோடீஸ்வரர்களை ஓட்டாண்டியாகி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது அந்த வீடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X