பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை விவசாயிகளுக்கு கைகொடுத்த பம்ப்செட் பாசனம்

Added : டிச 07, 2018
Advertisement
 மானாமதுரை விவசாயிகளுக்கு கைகொடுத்த பம்ப்செட் பாசனம்

மானாமதுரை:மானாமதுரை கால்பிரவு பகுதியில் போதிய மழை இல்லாமல் இருந்தாலும் வைகையில் தண்ணீர் வந்ததால்பம்ப் செட் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு,பீசர்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில்நெல் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் பெய்த மழையை நம்பி ஏராளமான விவசாயிகள்நெல் விதைத்து பணிகளை செய்து வந்தனர்.இந்நிலையில் நெற்கதிர்களில் பால் பிடிக்கும்நேரத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். வைகை ஆற்றில்தண்ணீர் திறந்து விட்டதால் ஓரளவிற்கு இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்துதற்போது அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.இது குறித்து விவசாயி பாண்டி,60,கூறியதாவது: ஆரம்பத்தில் நல்ல மழை பெய்தாலும் தொடர்ந்து மழை பொய்த்ததால் பயிர்கள் தண்ணீரின்றி வாடிய போதுகிணறுகளில் உள்ள மோட்டார் பாசனம் மூலம் ஓரளவிற்கு தண்ணீர் கிடைத்ததால் பயிர்கள் தற்போது நன்றாக வளர்ந்துவருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X