பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - மதுரை ரூ.1,140ல் தேஜஸ் ரயில்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை:அதிவேக தேஜஸ் ரயிலில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல, 1,140 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நவீன வசதிகளுடன், 160 கி.மீ., வேகத்தில் இயங்கக் கூடிய தேஜஸ் ரயில், சென்னை எழும்பூர் - மதுரை இடையே, அடுத்த வாரம் முதல், சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, காலை, 6:00க்கு புறப்பட்டு, நண்பகல், 1:00 மணிக்கு, மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, 2:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:35 மணிக்கு எழும்பூர் வந்தடையும். விழுப்புரம், திருச்சியில் நின்று செல்லும்.இந்த ரயிலை, வியாழன் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது;

ரயிலில், இரண்டு உயர் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள்; எட்டு, 'ஏசி' சேர்கார் பெட்டிகள் என, 10 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.இப்பெட்டிகளை, 160 கி.மீ., வேகத்தில் இயங்க முடியும் என்றாலும், சென்னை - மதுரை இடையேயான, ரயில் பாதையின் வேகம் தாங்கும் திறன் கருதி, முதலில், 70 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பின், படிப்படியாக வேகம் அதிகரிக்கப்படும்.

சேர் கார் வகுப்புக்கு, அடிப்படை கட்டணம், 765 ரூபாய்; உணவுக்கு, 375 ரூபாய் சேர்த்து, மொத்தமாக, 1,140 ரூபாயும், உயர் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய, அடிப்படை கட்டணம், 1,675 ரூபாய்; இதர கட்டணம், 460 ரூபாய் சேர்த்து, மொத்தமாக, 2,135 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201818:16:13 IST Report Abuse
Bhaskaran தென்மாவட்டமான நெல்லைப்பகுதி புறக்கணிக்கப்படுகிறது 160 கிலோமீட்டர் வேகம் வேண்டாம் ஐயா நூருகிலோமீட்டர் வேகத்தில் இயக்கி இந்த வண்டியை நெல்லைவரை நீட்டித்தாலென்ன அந்தப்பகுதிமக்கள் பாவம் செய்தவர்களா
Rate this:
Share this comment
Cancel
mupaco - Madurai,இந்தியா
07-டிச-201814:29:15 IST Report Abuse
mupaco ஆறரை அல்லது ஏழு மணி நேரம் என்றால் வைகை போதுமே. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X