கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தொழில் அதிபர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

Added : டிச 07, 2018
Advertisement

சென்னை, சைதாப்பேட்டையில் வசித்து வருபவன், தொழில் அதிபர், ரன்வீர் ஷா, 62. இவன், தன் சொகுசு பங்களா மற்றும் விவசாய பண்ணைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தான்.

சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், 'அமேதிஸ்ட்' என்ற ஓட்டலை நடத்தி வருபவள், கிரண் ராவ், 52. ரன்வீர் ஷாவின் தோழியான இவள், போயஸ்கார்டன் அருகே, 4 அடி ஆழத்தில், சிலைகள் உட்பட, 24 கலைப்பொருட்களை புதைத்து வைத்திருந்தாள்.அவற்றை எல்லாம், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் அதிரடி சோதனை நடத்தி மீட்டனர். இது தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோருக்கு, பல முறை சம்மன் அனுப்பினர்.

முன்ஜாமின் வழங்க, உயர் நீதிமன்றம் மறுத்ததையடுத்து, இருவரும் தலைமறைவாகினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், 'ரன்வீர் ஷா, கிரண் ராவ் இருவரும், உடனடியாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் திருச்சியில் உள்ள, முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இதுவே, இறுதி எச்சரிக்கை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X