கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை உயர் நீதிமன்ற கிளை செய்திகள்

Added : டிச 07, 2018
Advertisement

எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது
மதுரை ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:மதுரை தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு அறிவித்தது. அதை மத்திய அரசின், அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். கட்டுமானத்திற்கு தாமதமின்றி நிதி ஒதுக்கி, 'டெண்டர்' அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பு செயலர் சமர்ப்பித்த அறிக்கையில், 'மத்திய நிதி செலவினக்குழுவின் கூட்டம், டிச.,4 ல் நடந்தது. அக்குழுவின் ஒப்புதல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 'அது கிடைத்ததும், திட்ட அறிக்கை மத்திய கேபினட்டின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் கேபினட் ஒப்புதல் கிடைத்த பின், எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி, 45 மாதங்களில்முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என, குறிப்பிட்டு இருந்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர்.

ஸ்டிரைக் தடுக்க நடவடிக்கை என்ன

மதுரை முகமது யூனுஸ் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம், பணி அனுபவத்திற்கு ஏற்ப பதவி உயர்வு, உரிய பயணப்படி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.,4 ல் தமிழக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். டிச.,8 முதல், 13 வரை, அவசரமில்லா ஆப்பரேஷன்களை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்க ப்படுவர். வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, 'வேலைநிறுத்தத்தை தவிர்க்க மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரக இயக்குனர் இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X