கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஹெல்மெட்' போடாதது ஏன்?

Added : டிச 07, 2018
Advertisement

மதுரை:புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தில், டூ - வீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் மீதான வழக்கில், அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், சமூக ஆர்வலர், 'டிராபிக்'ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் மற்றும் சிலர் விதிகளை மீறி உரிமம் இன்றி, ஹெல்மெட் அணியாமல், டூ - வீலரில் சென்றனர்.

இலுப்பூர் போலீசில், புகார் செய்தேன்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மற்றும் சிலர், முன் அனுமதியின்றி, நவ.,8 ல் மதுரை சினிப்பிரியா தியேட்டர் அருகே, போராட்டம் நடத்தினர்; பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மதுரை அண்ணா நகர் போலீசில் புகார் செய்தேன்.

இரு மனுக்களின் மீதும், நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பி, டிச.,17 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X