புதுடில்லி: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது டுவிட்டர் பக்கத்தினை 4 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.இதைதொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடியை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் முதல் மூன்று தலைவர்கள் வருமாறு: 1) இந்திய பிரதமர் மோடி: 1,48,10,584 பேர்
2) இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ -1.22 கோடி பேர்
3) அமெரிக்க அதிபர் டிரம்ப் - 1 கோடி பேர்
4) போப் பிரான்சிஸ் -57,31224
முன்னதாக பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்து பேசிய புகைபடம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியது.அதற்கு அதிக விருப்பங்கள் (லைக்) குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றதுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE