சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் மாயமான பணம் துாத்துக்குடியில் கண்டுபிடிப்பு

Added : டிச 07, 2018
Advertisement
 கேரளாவில் மாயமான பணம் துாத்துக்குடியில் கண்டுபிடிப்பு

துாத்துக்குடி:கேரளா மாநிலம், புனலுாரில், 3ம் தேதி, தொலைத்த பணம், துாத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவரிடம், நேற்று ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்தவர், மகாலிங்கம், 51; கேரளாவில் உள்ள கோவிலில், கல் வேலை செய்து வருகிறார். 3ம் தேதி இவர், பாலக்காடு - புனலுார் பயணியர் ரயிலில், சங்கணாச்சேரியில், ஒரு பையுடன் ஏறியிருக்கிறார்.அதில், சில ஆவணங்கள், 22 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார்.

காயன்குளம் என்ற ஊரில் இறங்கிய மகாலிங்கம், தவறுதலாக வேறு பெட்டியில் ஏறி, தன் பையை தேடியிருக்கிறார். பை இல்லாததால், காயன்குளம் ரயில்வே போலீசில் புகார் அளித்து, சென்றார். பாலக்காடு - புனலுார் பயணியர் ரயில் அடுத்து, கன்னியாகுமரிக்கும், அங்கிருந்து, திருநெல்வேலிக்கும் அடுத்தடுத்து வந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து, துாத்துக்குடிக்கு பயணியர் ரயிலாக சென்றது.நேற்று முன்தினம், 5ம் தேதி, துாத்துக்குடி வந்த ரயில் பெட்டிகளை, டிச., 6 பாபர் மசூதி இடிப்பு தின பாதுகாப்பு பணிக்காக, ரயில்வே போலீசார் சோதனை செய்துள்ளனர்.

அப்போது, ஒரு பெட்டியில், அனாதையாக கிடந்த பையை மீட்டனர். அதில், ஆதார் கார்டு, வங்கி, ஏ.டி.எம்., கார்டுகள், 22 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.பையில் இருந்த நகைக் கடை ஏலச்சீட்டு ரசீதில் காணப்பட்ட மொபைல் நம்பருக்கு போன் செய்த போது, அந்த பை, கேரளாவில் மகாலிங்கம் தவற விட்டது என்பது தெரிந்தது. அவரை நேற்று, துாத்துக்குடிக்கு வரவழைத்து, பை மற்றும் பணத்தை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X