சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளபட்டியில் தொழில் போட்டியால் நடந்த கொலை: * மதுகுடித்து இருவர் பலியானதில் 'திடுக்'

Added : டிச 07, 2018
Advertisement

கொடைரோடு:கொடைரோடு அருகே பள்ளபட்டியில் மதுகுடித்து இருவர் பலியான சம்பவத்தில், மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன், 50, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சாயிராம் என்ற சமயன்,59, பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் தங்கபாண்டி,40. மூவரும் நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணிக்கு பள்ளபட்டிக்கு மதுகுடிக்க சென்றனர்.
அங்கு, ஜெயச்சந்திரன்,37, என்பவர் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து பாட்டில்களை வாங்கி வந்து, தனது சிக்கன் கடையில் வைத்து விற்று வந்தார். அவரிடம் மூவரும் மதுவாங்கி குடித்தனர்.உடனே மயங்கி விழுந்த அவர்களை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முருகனும், சமயனும் இறந்தனர்.
தங்கபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போலி மதுவால் இருவரும் இறந்ததாக தகவல் பரவியது. ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி., நிர்மல்குமார் ஜோஷி, எஸ்.பி., சக்திவேல், அம்மையநாயக்கனுாரில் விசாரித்தனர். இதில் மூவரும் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் கூறியதாவது: பள்ளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். கொடைரோடு அரசு மதுபானக் கடை மேற்பார்வையாளர். இவரிடம், ஜெயச்சந்திரன் மதுபாட்டில்களை வாங்கி விற்று வந்தார். லாபத்தை இருவரும் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஜெயச்சந்திரன், கடந்த 3 மாதங்களாக பள்ளபட்டி மாவூர் டேம் அரசு மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்றார்.இதனால் அதிருப்தியில் இருந்த ராஜலிங்கம், தனது அண்ணன் கருணாநிதியை பார்ட்னராக சேர்க்க ஜெயச்சந்திரனிடம் தெரிவித்தார். அவர் இதற்கு மறுத்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


எட்டு பேர் கைது

சிலஆண்டுகளுக்கு முன் பள்ளபட்டியை சேர்ந்த தமிழ்வாணன் நடத்தி வந்த சிக்கன் கடை அகற்றப்பட்டதற்கு ஜெயச்சந்திரன் தான் காரணம் என அவர் கருதினார். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், ராஜலிங்கமும், தமிழ்வாணனும் சேர்ந்து, ஜெயச்சந்திரனின் மது விற்பனையை முடக்க முடிவுசெய்தனர்.இதற்காக கவுண்டன்பட்டியை சேர்ந்த அ.கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பணம் கொடுத்து, ஜெயச்சந்திரனிடம் இருந்து 5 மதுபாட்டில்களை வாங்கி வரச்செய்தனர்.

மறுநாள், அதே மதுபாட்டில்களில் விஷம் கலந்து ஜெயச்சந்திரனிடமே திரும்ப கொண்டு கொடுத்துள்ளனர். இந்த பாட்டில்களை குடித்ததால்தான் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ராஜலிங்கம், தமிழ்வாணன், பள்ளபட்டி கிருஷ்ணமூர்த்தி, கவுண்டன்பட்டி கிருஷ்ணமூர்த்தி, செந்தில், மதுரையை சேர்ந்த பட்டறை பாலு ஆகியோரையும், சட்டவிரோதமாக மதுவிற்றதாக ஜெயச்சந்திரன், செல்வம் ஆகியோரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X