சிவகங்கை:சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த மாணவி சுவேதா பள்ளிக்குள் தடையை மீறி அலைபேசி வைத்திருந்ததை பார்த்த ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் மாணவியை விசாரித்து விட்டு, அவரது தந்தை சிவனேசனை பள்ளிக்கு வரவழைத்து, அவர் முன்னிலையில் மாணவியை பற்றி புகார் கூறியுள்ளனர்.அப்போது திடீரென சுவேதா ஓடிச்சென்று 2வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் இடுப்பு மற்றும் முகுது தண்டுவட எலும்புகள் முறிந்த நிலையில் மாணவி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
முதலுதவிக்கு பின், அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று காலை இறந்தார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.