சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை அரிவாளால் வெட்டி நகைபறிப்பு

Added : டிச 07, 2018
Advertisement
 தம்பதியை அரிவாளால் வெட்டி நகைபறிப்பு

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட எல்லையில், பைக்கில் வந்த தம்பதியை அரிவாளால் வெட்டி 5 பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 48. மாவு மில் நடத்திவருகிறார். இவருடைய மனைவி வனிதா, 38. தம்பதி ராஜபாளையம் அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு பைக்கில் திரும்பினர். திருநெல்வேலி மாவட்டம் பருவக்குடி, மலையடிப்பட்டியில் வந்தபோது, ஹெல்மெட், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் இருவரையும் வழிமறித்தனர். நகைகளை கேட்டனர். தரமறுத்ததால் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

கணவனும், மனைவியும் கொள்ளையர்களிடம் போராடினர். அப்போது அந்த வழியாக பஸ் வந்ததால் கொள்ளையர் தப்பி ஓடினர்.இருப்பினும் வனிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகை மற்றும் கவரிங் நகை ஆகியவை பறிக்கப்பட்டன. காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X