சீனாவின் ஹுவேய் நிறுவன தலைமை நிதி அதிகாரி கைது

Added : டிச 07, 2018
Advertisement

ஒட்டவா:சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்டார்.சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சூ, அமெரிக்க அரசின் அறிவுறுத்தலால் கைது செய்யப்பட்டது இரு நாடுகளிடையான வணிக உறவை மேலும் பாதிக்கும் எனச் சீனா தெரிவித்துள்ளது.சீனாவும் அமெரிக்காவும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி ஏற்கனவே வணிகப் போட்டியில் உள்ளன. இந்த வணிகப் போரை 3மாதங்களுக்கு நிறுத்தி வைக்க இருநாட்டு அதிபர்களும் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் அறிவுறுத்தலால் சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சூவைக் கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவோ கனடாவோ கைதுக்கான காரணத்தை இதுவரை தெரிவிக்காத நிலையில் இதற்குச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வணிகப் போட்டி நிலை தளர்வடையும் என எதிர்பார்த்துள்ள சூழ்நிலையில் இந்தச் செயல் அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X