தமிழ்நாடு

தேக்கம்! திண்டுக்கல் மாவட்டத்தில் 5,558 மனுக்கள்; வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு

Added : டிச 07, 2018
Share
Advertisement

திண்டுக்கல்:வி.ஏ.ஓ.,க்களின் தொடர் போராட்டத்தால் சான்றிதழ் வழங்கம் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. மாவட்டத்தில் 5 ஆயிரத்து 558 மனுக்கள் தேக்கமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். வி.ஏ.ஓ.,க்களுக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, வி.ஏ.ஓ.,க்கள் பணியை தொழில்நுட்ப பணியாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியமானவை.

இவற்றை வலியுறுத்தி நவ.28 முதல் 'ஆன்லைன்' பணிகளை புறக்கணித்துள்ளனர். திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இன்று (டிச.7) கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.'ஆன்லைன்' பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதால், இருப்பிடம், வருமானம், சாதி, விதவை உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணி ஸ்தம்பித்துவிட்டது.

திண்டுக்கல் கிழக்கு தாலுகாவில் 922, மேற்கில் 735, ஆத்துாரில் 394, கொடைக்கானலில் 498, நத்தத்தில் 265, நிலக்கோட்டையில் 804, ஒட்டன்சத்திரத்தில் 446, பழனியில் 858, வேடசந்துாரில் 636 மனுக்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 558 மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளன. பட்டா மாறுதல் பணியும் முடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறும்போது, 'எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் வரை போராட்டம் தொடரும். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு மத்தியிலும் 'கஜா'வால் ஏற்பட்ட பயிர்சேதத்தை கணக்கெடுத்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X