பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தான், தெலுங்கானாவில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018
Advertisement
தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டசபை தேர்தல், ஓட்டுப்பதிவு

புதுடில்லி: ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

தெலுங்கானாவில், மொத்தம், 119 சட்டசபை தொகுதிகளில், 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங் , 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன. பா.ஜ., 118 இடங்களில் போட்டியிடுகிறது. தெலுங்கானாவில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

ராஜஸ்தானில் மொத்தம், 200 சட்டசபை தொகுதிகளில், 4.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் சட்டசபை தொகுதியில், பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், திடீரென மரணமடைந்தார். அங்கு தேர்தல், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 199 தொகுதிகளில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி அமைதியாக நடந்தது. இதில், 2,247 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 189 பேர் பெண்கள்.
இன்று பதிவாகும் ஓட்டுக்கள் டிச., 11 அன்று எண்ணப்பட்டு, இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X