மேகதாது : பிரதமரை சந்திக்க கவர்னர் இன்று டில்லி பயணம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (10)
Advertisement
கவர்னர் பன்வாரிலால், மோடி, டில்லி, மேகதாது அணை, தமிழக சட்டசபை, தீர்மானம், கஜா புயல், நிவாரணம்

புதுடில்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று (டிச.,07) டில்லி செல்ல உள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (டிச.,06) சட்டசபையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ள நிலையில் கவர்னர் இன்று டில்லி செல்ல உள்ளார். அதனால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி புயல் சேதத்தை நேரில் பார்வையிட வரவில்லை என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் கவர்னர் பன்வாரிலால் டில்லி செல்கிறார். மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:20:01 IST Report Abuse
Bhaskaran அவர் தன சொந்த வேலையாக செல்கிறார் முடிந்தால் அப்படியே பிரதமரை பார்த்துவிட்டு வந்தாலும் வருவார்
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-201814:20:19 IST Report Abuse
ஜெயந்தன் அட பாறாரா ......என்ன ஒரு அக்கறை
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-டிச-201812:52:25 IST Report Abuse
Pugazh V தமிழக பாஜக, கர்நாடக பாஜக விடம் பேசி எதாவது செய்யாதாம்..வட இந்திய பாஜக, கர்நாடக அரசிடம் அணை தானே நீ கட்டிக்கோ..தமிழக அரசு நீ முட்டிக்கோ என்று சொல்லி சிரிக்கிறது. தமிழக பாஜகவினர், தமிழர்களையும் த.நா. அரசையும்.சேர்த்து அவமானப்படுத்தி எழுதுகிறார்கள். த.நா.கவர்னர் த.நா. முதல்வரைக் கலந்தாலோசிக்காமல் த.நா. பற்றி பேசுவது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தவறு. ஆனால் பாஜக வினருக்கு தவறுகள் தான் சரிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X