சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பை துண்டித்து கைவரிசை

Added : டிச 07, 2018
Advertisement

தர்மபுரி: மின் இணைப்பை துண்டித்து, அடுத்தடுத்த வீடுகளில், பணம், பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி அடுத்த, இண்டூரில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை, சிலர் துண்டித்துள்ளனர். இதையறியாத மக்கள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதை சாதகமாக்கிக் கொண்ட கொள்ளையர்கள், அடுத்தடுத்து, 12 பேர் வீட்டில், 80 ஆயிரம் ரூபாய், வீட்டு உபயோக பாத்திரங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். காலையில் எழுந்த மக்கள், பொருட்கள் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகார்படி, இண்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, ஒரு வாரத்துக்கு முன், இண்டூரில் பல்வேறு வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய நிலையில், மீண்டும், அதே பகுதியில் கொள்ளைச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X