சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கித்தருவதாக மோசடி: அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி கைது

Added : டிச 07, 2018
Advertisement

எருமப்பட்டி: உடன் பணியாற்றும் ஆசிரியரின் மனைவிக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், ஊரக்கரையை சேர்ந்தவர் கணேஷ், 57. அவர், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில், பவித்திரத்தை சேர்ந்த சேகர், 44, செல்வக்குமார், 42 ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கணேஷ் மனைவி சவுந்தரி, 46, டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சவுந்தரிக்கு, அரசு வேலை வாங்கித்தருவதாக, சேகர், செல்வக்குமார் ஆகியோர், கணேஷிடம் தெரிவித்தனர். மேலும், 'அதற்கு சில லட்சங்கள் செலவாகும்' என, கூறியுள்ளனர். இதையடுத்து, தன் வங்கி ஏ.டி.எம்., கார்டை இருவரிடமும் கணேஷ் வழங்கியுள்ளார். அதை பயன்படுத்தி, சம்பளத்தொகையில், 10 ஆயிரம் ரூபாய் மட்டும் கணேஷிடம் வழங்கிவிட்டு, மீதி தொகையை, இருவரும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கணேஷ், வங்கியில், 4.98 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அத்தொகையை, சேகரும், செல்வக்குமாரும் பெற்றுக் கொண்டு, ஏ.டி.எம்., கார்டை திருப்பி வழங்கி விட்டனர். ஆனால், அரசு வேலை வாங்கித்தரவில்லை. அதிர்ச்சி அடைந்த கணேஷ், இது குறித்து, எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்படி, வழக்கு பதிந்த போலீசார், வேலை வாங்கித்தருவதாக கூறி, ஆசிரியரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த, சேகரை கைது செய்தனர். செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X