காக்கும் ரோபோ கவசம் !| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காக்கும் ரோபோ கவசம் !

Added : டிச 07, 2018
காக்கும் ரோபோ கவசம் !

உலகெங்கும் பழைய அணு உலைகளை நிர்வகிப்போர், அதை நிறுத்திவிட்டு பத்திரமாக பிரித்தெடுப்பது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். தானியங்கி ரோபோக்கள் சொதப்புகின்றன. தொலைவியக்க ரோபோக்களை பயன்படுத்துவதிலும் சிக்கல். காற்று நிரப்பிய பிளாஸ்டிக் உடை கதிரியக்கத்தை தடுக்கும். என்றாலும், அதை வெகுநேரம் அணிந்தால் பணியாளரின் உடல் வெந்து விடும்.
எனவே படக்கதை நாயகன் டோனி ஸ்டார்க் வடிவமைத்த, அயர்ன் மேன் கவசம் போல 'எக்சோஸ்கெலட்டன்' உடையை வடிவமைக்க, இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கவசத்தை 'அணிந்துகொள்ளக்கூடிய ரோபோ' எனலாம். கதிரியக்கமுள்ள காற்றை சுவாசிப்பது, கதிரியக்க பொருட்கள் உடலில் படுவது போன்ற ஆபத்துக்களை அயர்ன் மேன் பாணி உடை தடுக்கும். மேலும், தலைக் கவசத்தில் உள்ள 'மேம்பட்ட மெய்நிகர்' திரை, பணியாளருக்கு வழிகாட்டும். விண்வெளி வீரர்களுக்கான உடைகளையே வடிவமைத்த விஞ்ஞானிகளால் இது முடியாதா என்ன?

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X