நிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்!

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
நிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்!

முன்னாள் சோவியத் யூனியன், 1970ல் நிலாவில் தரையிறக்கிய லுானா, 16 என்ற ஆளில்லா விண்கலம், நிலாவின் மண், கற்களை எடுத்து பூமிக்கு ராக்கெட் மூலம் அனுப்பியது.
அதில் மூன்று கற்களை, அண்மையில் நியூயார்க் நகரில், 'சோதேபிஸ்' நிறுவனம் ஏலம் விட்டபோது, 6.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதுவரை அமெரிக்கா, 382 கிலோவும், ரஷ்யா, 301 கிராமும் நிலாவிலிருந்து மண், கற்களை கொண்டுவந்துள்ளன. இவை அரசுகளுக்கே சொந்தம். ஆனால், சோவியத் விண்வெளி சாதனைகளின் பிரம்மாவான செர்ஜி கோரலேவ், வெளியுலகம் அறியப்படாமலே, 1966ல் காலமானார்.
அவரை கவுரவிக்க, அவரது மனைவி மீ நினா இவானோவ்னா கோரலேவாவுக்கு, 200 மில்லி கிராம் நிலா கற்களை ரஷ்யா பரிசளித்தது. அதுக்குத் தான் இத்தனை கிராக்கி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X