SC dismisses PIL against FM Arun Jaitley | அருண் ஜெட்லிக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

அருண் ஜெட்லிக்கு எதிரான மனு தள்ளுபடி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
அருண் ஜெட்லி, சுப்ரீம் கோர்ட், தள்ளுபடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி எம்எல் ஷர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கறிஞர் ஷர்மாவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அவர் கட்டாத வரை, ஷர்மா தாக்கல் செய்யும் எந்த மனுவையும் பதிவு செய்யக்கூடாது என பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X