பொது செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு தடை: இம்மாத இறுதிக்குள் அமல்படுத்த கலெக்டர் உறுதி

Added : டிச 07, 2018
Advertisement

சத்தியமங்கலம்: ''திம்பம் மலைப்பாதையில், அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் செல்ல, இம்மாத இறுதிக்குள், தடை விதிக்கப்படும்,'' என, ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, திம்பம் மலைப்பாதை, தமிழகம்-கர்நாடகாவை இணைக்கும், முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இதில், 27 அபாயகர கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதிகபாரம் ஏற்றிய லாரிகளால், கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து ஏற்பட்டு, அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது. இப்பதையில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க, வட்டார போக்குவரத்து அலுவலகர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

இந்நிலையில் மலைப்பாதையில், கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்தி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். பண்ணாரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆலோசனை நடத்திய பின், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: திம்பம் மலைப்பாதையில், விபத்துகளை தடுக்கும் விதமாக, நீளமான பாடிகள் கொண்ட, 12 மற்றும், 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், 16 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றிவரும் வாகனங்களை தடை செய்யவுள்ளோம். அதேபோல், 16 டன்னுக்கு குறைவாக உள்ள வாகனங்கள், மாலை, 6:00 மணி முதல், காலை, 8:00 மணிவரை மலைப்பாதையில் செல்ல, தடை விதிக்க இருக்கிறோம். நோட்டீஸ் மற்றும் விளம்பரம் மூலம், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். எப்படியானாலும், இம்மாத இறுதிக்குள், தடை உறுதியாக அமலுக்கு வந்து விடும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X