சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (11)
Advertisement
அரசு மருத்துவமனை, லஞ்சம், ரெய்டு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மற்றும் மகப்பேறு பிரிவில் சோதனை நடந்தது. அதில், கணக்கில் வராத ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனை, சேலம் மாவட்டம் ஒமலூர் மருத்துவமனை சோதனை நடந்தது. திருச்சி, திண்டுக்கல், அரசு மருத்துவமனைகளிலும் சோதனை நடந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையில் ஊழியர்களிடம் கணக்கில் வராத ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் 500 முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஎஸ்பி மனோகர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். மேலும், வார்டுகளில் உள்ள பெண்களிடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
10-டிச-201817:10:55 IST Report Abuse
kalyanasundaram Why at all to punish these people for taking petty bribes. .But what have been done to ministers and high government officials . Make high officials to have good conduct .
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
08-டிச-201811:59:58 IST Report Abuse
sumutha - chennai இது ஒரு மெகா பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம். எனது இரண்டாவது மகன் கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்தான். அப்போது அதை பதிவு செய்யும் பிரிவில் இருந்த ஒருஊழியர் அந்த மருத்துவமனையின் எதிரில் உள்ள பகுதியை சேர்ந்தவர். அவர் பணம் பெற்ற பிறகே அதை பதிவு செய்தார்.இதில் ஒரு சிறப்பு என்னவெனில் அப்போதைய மத்திய அரசியல் அமைச்சராக இருந்த தலித் எழில் மலை அவர்கள் அந்த மருத்துவமனையின் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து அங்கே மருத்துவமனை வளாகத்தில் அங்கிருந்த மக்களிடையே உரையாற்றி கொண்டிருந்தார் அவர் அந்த பக்கம் பேசி கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் இது போன்ற மனித மிருகங்கள் தங்கள் "கடமையை" செய்தவாறே இருந்தனர். அதுவே இன்றளவும் தொடர்கிறது. இனியும் தொடரும் இது போன்ற பணவெறி கொண்ட சைக்கோக்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதால் அவர்களை முற்றிலும் சரியாக்குவதென்பது நடவாத காரியம்.
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
07-டிச-201821:19:53 IST Report Abuse
Devanand Louis இதேபோல நடவடிக்கை தேவை -தமிழ் நாடு மின்சார உரிமம் வழங்கும் வாரியத்தில்( தமிழ் நாடு எலக்ட்ரிகல் லைசென்சிங் போர்டு ) , அங்குள்ள மேல் அலுவலர்களெலாம் பணத்தை வாங்கிக்கொண்டு உரிமம் வழங்குகிறார்கள் . தகுதி கொண்ட என்ஜினீர்களுக்கு உரிமம் வழங்க பெரும் தொகைகள் வேண்டுமென்று டிமாண்ட் செய்கிறார்கள் , ஆகையால் அங்கும் இதே மாதிரி சோதனைகள் செய்யவேண்டும் என்[அது எல்லோரது விருப்பம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X