பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்'

Added : டிச 07, 2018 | கருத்துகள் (49)
Advertisement
மத்திய அரசு ஊழியர்கள், பென்சன், மத்திய அரசு பங்களிப்பு, ஜாக்பாட், லோக்சபா தேர்தல்

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் தொகையில் அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டாக பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களை குறிவைத்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி தேசிய பென்சன் திட்டத்தின் கீழ், 2004 ம் ஆண்டு ஜனவரி அல்லது அதற்கு பின் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 14 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக மத்திய அரசு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகை அதிரடியாக அதிகரிக்கும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள தொகையில் 10 சதவீதம் பென்சன் நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. மத்திய அரசும் 10 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி, மத்திய அரசு அளிக்கும் பென்சன் நிதி பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனால் 60 வயதில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியரின் பென்சன் தொகை வெகுவாக அதிகரிக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் பங்களிப்பை அதிகரிக்க நிதி மசோதாவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய பயன் 2019 ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு இது புதிய பயன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு நிறுத்தி வைத்துள்ளது. 2004 ம் ஆண்டு திட்டத்தின் படி, வருமான வரி விதியின் கீழ் ஊழியர்களின் பங்களிப்பு தொகையில் வரி விலக்கு அளிக்க முடியாது. தற்போது இந்த விதியிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - tirunelveli,இந்தியா
09-டிச-201815:55:51 IST Report Abuse
sams The central government has spent Rs 11 lakh crore ($160 billion), nearly twice Sri Lanka’s gross domestic product (GDP) in 2017 ($87 billion), on 3.2 million employees in 10 years to 2016-17 the expense rose 340 percent.this is an extract from data of indian government in google .the central government employees already got more fat salary ,why the government giving them more and encourage to hold black money like this way by govt employees .in that government employees about 50 % have a habit of getting bribe that amounts 5 lakh crore which went in the form of black money in every year as gold and other immovable assets. Govt employees are the highest blackmoney holders compare to politicians and industrialists, but it distributed widely (with crores in headcounts)compare to politicians and industrialists who are in lakhs only. if government want to cleanout blackmoney they should start from govt employees. a rough calculation of govt employee black money= 10 lakh average per year bribe money per employeex50 lakh employees(50% of bribe taking employees of one crore govt employees)x30 year of service=more than 100 lakh crores black money in the hand of govt employees only. that was in the form of real estate,gold and illegal investment route.the govt take the blood of poor people as tax to give overdose to govt employees.Who will come to stop this day time robbery of government from poor people
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
07-டிச-201820:30:28 IST Report Abuse
spr தேர்தலுக்கு முன் தரப்படும் இதுவும், ஒருவகை லஞ்சமே. இதன் மூலம் மாநில (குறிப்பாகத் தமிழக) அரசு ஊழியர்களை போராட்ட முயற்சிக்குத் தள்ளி அதனால் அஇஅதிமுக அரசுக்கு ஒரு இக்கட்டை உண்டு பண்ணுவதே நோக்கம் அரசு சாரா ஊழியர்கள் பலர் பணி ஓய்விற்குப் பிறகு வாழ்நாள் சாதனையாளராக வேலை தேடி மானம் கெட்டு அலைகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா
07-டிச-201820:14:42 IST Report Abuse
COW காப்பாளன் SURESH பறவகைகள் குறிப்பாக குருவிகளின் இழப்பிற்கு செல்போனுக்கு தொடர்பில்லை என்பது தெரியுமா ? அதையே கருவாக கொண்ட திரைப்படத்தின் விமர்சனத்தில் அது பற்றி ஒரு தகவலும் இல்லை, என் எல்லாம் அருகே மிக மிக அருகில் ஐந்து செல் டவர் காணலாம், என் இல்லே மொட்டை மாட்டி சென்று நான்கு புறமும் சுற்றி பார்த்தல் 96 செல் கோபுரங்கள் உண்டு. இருப்பினும், என் இல்ல வாசலில் பறவகைளில் ஓசைகளும் கூடுகளும் உண்டு, கருவே தவறு,,,,
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
08-டிச-201813:26:49 IST Report Abuse
Ramamoorthy Pடெக்னலாஜிக்குள் போக தேவையில்லை. காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே மனிதகுலத்தின் கடமை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X