காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகள்...

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018
Advertisement
காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகள்...


மகா பெரியவா என்று அவரது பக்தர்களால் மனமுருகி அழைக்கப்பெறும் காஞ்சி மகான் பற்றி இசைக்கவி ரமணன் சென்னை வாணி மகாலில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அவர் ஏற்கனவே 501 எபிசோட்டுகள் காஞ்சி பெரியவரைப்பற்றி தனியார் தொலைக்காட்சியில் பேசியவர் என்பதால் அதிக எதிர்பார்ப்போடு மக்கள் வந்திருந்தனர் அவர்களை இசைக்கவி ரமணனும் ஏமாற்றவில்லை

ரமணன் பேசியதன் சுருக்கமாவது...

87 வருடங்கள் வாழ்ந்த பெரியவரின் சாதனை எது என்றால் அவர் நிகழ்த்திய அற்புதங்களோ,அவர் வழங்கிய கொடைகளோ கூட கிடையாது மடத்தை நிர்வாகித்துக் கொண்டு அன்றாடம் ஆயிரம் பேருக்கு தரிசனம் தந்து கொண்டு அதில் பலரை நினைவு படுத்தி பேசிக்கொண்டு இருந்த நிலையிலும் ஒரு நாள் கூட விடாமல் அவர் மேற்கொண்ட தவம்தான் அவரது பெரிய சாதனை.

இந்த உலகம் அவரை உச்சத்தில் வைத்து போற்றுகிறது பாராட்டுகிறது வணங்கிமகிழ்கிறது ஆனால் புரிந்து கொள்ளவி்ல்லை ஒரு ஐநுாறு ஆயிரம் வருடம் கழித்து இப்படி மகான் வாழ்ந்திருந்தார் என்பதை அப்போதுதான் அவரை முழுமையாக புரிந்து கொள்ளும்.

எளிய வாழ்க்கையே இன்பம் என்று வாழ்ந்தார் உடுத்துவதற்கு ஓன்று உலர்த்துவதற்கு ஒன்று இருப்பில் ஒன்று என்று மூன்று காவி உடைகளை அதுவும் கதராலான காவி உடைகளை மட்டுமே சொந்தமாகக்கொண்டு வாழ்ந்தவரவர்.

பக்தர்கள் கொண்டுவந்து தட்டு தட்டாக கொடுக்கும் பழம் வஸ்திரம் பணம் ஆகியவற்றை அந்த நிமிடமே அதற்காக காத்திருக்கும் ஏழை பக்தர்களுக்கு வழங்கியவர்.

யாத்திரை என்றாலே அவரைப் பொறுத்தவரை பாதயாத்திரைதான் அவரது பாதயாத்திரயைில் பங்கேற்போர் எந்த வித சன்மானம் பரிசுப்பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது அப்படி ஆசைப்படுபவர்கள் யாத்திரையில் இடம் பெறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர்.

தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பாதுகாப்பது என்பது பெரிதாக ஒன்றும் இல்லை அதைக்கடைப்பிடிப்பதே பாதுகாப்பதுதான் என்பார்.

யார் ஒருவர் நல்லதை எண்ணி நல்லதையே செய்கிறாரோ அவரே சித்தசுத்தி அடைந்தவராவர், பேச்சு என்பது வெள்ளி என்றால் மவுனம் என்பது தங்கம் போன்றது ஆகவே எதற்கு மதிப்பு என்பதை புரிந்து கொள்ளலாம்.

அவர் தன் வாழ்க்கை முழுவதும் வலியுறுத்திய கருத்துக்கள் கொஞ்சம்தான் அதை கடைப்பிடித்தாலே போதும்

நாட்டுக்கு உழைப்பது,வீட்டில் தினம் இறைவழிபாடு,குழந்தைகளுக்கு தேவாரம் திருப்புகழ் பாசுரங்களை கற்றுக்கொடுத்தல்,மற்றவர்களை ஏவிவிடாமல் நம் உடம்பு தேய திருத்தொண்டு புரிவது, கோயில்கள் இல்லையேல் ஆன்மீகம் இல்லை ஆன்மீகம் இல்லையேல் மனதில் அமைதி இல்லை அமைதி இல்லையேல் அகிலத்தில் எதுவும் இல்லை என்பதால் பழமையான கோயில்களுக்கு பொருளுதவி செய்யவேண்டும்,பசுவை தெய்வமாக மதிக்கவேண்டும்,நாளும் பிடியரிசி எடுத்துவைத்து நலிந்தவர்களுக்கு உதவவேண்டும்,ஆதரவற்ற பிரேதங்களுக்கு ஆதரவாக இருந்து நல்லடக்கம் செய்தல் வேண்டும் இது ஆயிரம் அஸ்வமேதயாகம் செய்வதற்கு சமமாகும்,தாய் தந்தையைரை மதித்தல் வேண்டும்,குலதெய்வ வழிபாட்டை விடக்கூடாது,அன்பான எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் இதைத்தான் அவர் வலியுறுத்தினார் இதில் எதுவும் செலவு இல்லை எதுவும் ஆடம்பரம் இல்லை எல்லாம் எல்லோராலும் செய்யக்கூடியதே.. செய்வோமா?

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X