மம்தாவுக்கு பயம்: அமித்ஷா தாக்கு| Dinamalar

மம்தாவுக்கு பயம்: அமித்ஷா தாக்கு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (21)
பா.ஜ., பாஜ, அமித்ஷா, மம்தா, மேற்கு வங்கம்,மம்தா பானர்ஜி,

புதுடில்லி: பா.ஜ., அறிவித்த பேரணியை பார்த்து பயம் ஏற்பட்டதால் தான், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


மேல்முறையீடு

2019 லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. நாளை(டிச.,07) கூச்பெகரில் இந்த யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்க அரசு இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக்கூறி மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.


மக்கள் முடிவு

இது தொடர்பாக பா.ஜ., தலைவர் அமித்ஷா டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகள் நசுக்கப்பட்டுள்ளன. முதல்வர் தொடர்ந்து இதனை கடைபிடித்து வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளால் மம்தாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. தூக்கமும் தொலைந்துவிட்டது. இதனால் தான் அவர் யாத்திரையை தடுத்துள்ளார். ஆதரவு குறைந்து வருவதை கண்டு அவருக்கு ஏற்பட்டுள்ள பயத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு தீர்வு கிடையாது.

பா.ஜ.,வை ஆதரிப்பது என்பது மக்களின் முடிவு. இங்கு மாபியாக்கள் செயல்படுகின்றனர். அவர்களை மாநில அமைச்சர்கள் ஆதரிக்கின்றனர்.முன்னர், மாநிலத்தில் ரபிந்தரநாத்தின் பாடல்கள் கேட்டநிலையில், தற்போது குண்டு சத்தம் தான்கேட்கிறது. அனைத்து விஷயங்களையும் சட்டப்படி அனுமதி பெற்று யாத்திரை நடக்கும். யாத்திரை ரத்து செய்யப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் யாத்திரை செல்லும். நாளை நான் மேற்கு வங்கம் செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X