விஜய் மல்லையா மனு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (14)
Advertisement
விஜய் மல்லையா, மல்லையா, அமலாக்கத்துறை, சுப்ரீம் கோர்ட், தள்ளுபடி

புதுடில்லி: தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தள்ளுபடி

பிரபல மதுபான நிறுவன தொழிலதிபரான, விஜய் மல்லையா, கடன் மோசடி செய்ததாக, பல வங்கிகள், வழக்குகள் தொடர்ந்தன. இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகருக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்ற வாளி என அறிவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை, அமலாக்கத் துறை மேற்கொள்ள முடியும். இந்த மனுவை எதிர்த்து, மல்லையா தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டும், மும்பை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடு

இதனை எதிர்த்து மல்லையா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்கே கவுல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை சிறப்பு கோர்ட்டின் விசாரணைக்கு தடை விதித்த நீதிபதிகள், மனு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-டிச-201806:10:05 IST Report Abuse
D.Ambujavalli அதெல்லாம் onrumillai. 'Aahaa, itho paar, mallaiyaavaiye adakki asalai(yaavathu) kodukka vaiththuvittom' enru naadaalumanra the therthalil murasu kottalaam, atharkaana erpaaduthaan ithu. Ippadiye oru aaru maatham maintain seythuvittu, therthal mudinthathum 'mallaiyaavaa avar Enke ponaaro ' mudinthathu kathai.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-டிச-201820:41:37 IST Report Abuse
Darmavan மேல் கோர்ட்டுக்கு போவதை சரிப்படுத்த வேண்டும். நீதி நடை முறை சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-டிச-201820:39:33 IST Report Abuse
Darmavan நீதித்துறை என்று எல்லாவற்றையும் சரியாக பார்க்கப் போகிறது .நீதிமன்றங்களே இந்நாட்டின் சாபங்கள். இந்த வழக்கில் உச்ச நீதி ஏன் இப்படி நடக்கிறது என்று எந்த அறிவுள்ளவனுக்கும் கேள்வி எழும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X