சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் உதவியாளரிடம் சி.பி.ஐ., விசாரணை

Added : டிச 08, 2018 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை, 'குட்கா' ஊழல் குற்றச்சாட்டில், அமைச்சர் விஜய பாஸ்கரின் தொடர்பு குறித்து, அவரது உதவியாளரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், மாதவ ராவ். சென்னை, அண்ணா நகரில் வசிக்கிறார். செங்குன்றம் அருகே, சட்ட விரோதமாக, குட்கா ஆலை நடத்தி வந்தார். இதன் பங்குதாரர்களாக, உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் செயல்பட்டனர்.மாதவ ராவ் உள்ளிட்டோரின், சட்ட விரோத செயலை கண்டுகொள்ளாமல் இருக்க, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர், பி.வி.ரமணா, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு, லஞ்சம் தரப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதில் கிடைத்த டைரியில், குட்கா ஆலை அதிபர்களிடம் இருந்து, எந்த தேதியில், எவ்வளவு ரூபாய் பெறப்பட்டது என்ற, குறிப்பு இருந்தது.இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும், விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன், பி.வி.ரமணா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மாதவ ராவ், கலால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என, ஆறு பேரை கைது செய்தனர்.இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி இருந்தனர். அவர், நேற்று காலை ஆஜரானார்.அவரிடம், பல மணி நேரம் விசாரணை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகள், விஜயபாஸ்கர் சொத்து விபரம், நடத்தும் கல்வி நிறுவனங்கள், அதன் வருமானம், கல் குவாரிகள் குறித்தெல்லாம் கேட்டுள்ளனர்.மேலும், 'குட்கா ஆலை அதிபர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டது யார்; மாதம்தோறும், எவ்வளவு தொகை தரப்பட்டது; அதற்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உதவி செய்தனரா' என்றும், விசாரித்துள்ளனர். சரவணனின் வாக்குமூலத்தை, 'வீடியோ'வில், பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக, விஜயபாஸ்கரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darunika - chennai,இந்தியா
08-டிச-201816:59:31 IST Report Abuse
Darunika சில சமூகவிரோதிகளால் போடப்பட்ட பொய் வழக்கு நிச்சியம் தள்ளுபடியே செய்யப்படும்
Rate this:
Share this comment
Cancel
Aish - chennai,இந்தியா
08-டிச-201816:56:57 IST Report Abuse
Aish சட்டம் தன் கடமையை செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Rana - tamilnadu,இந்தியா
08-டிச-201816:51:11 IST Report Abuse
Rana தப்பு பண்ணது யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X