பைக்கில் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

Added : டிச 08, 2018
 பைக்கில் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

பண்ருட்டி: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் தலைமையில் போலீசார் நான்குமுனை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜித்தன் மோகன், 34; பெரியசாமி, 35; என தெரியவந்தது.உடன் போலீசார் இருவரையும் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X