வீடுகளை சூழ்ந்த மழைநீர்: நுாதன போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடுகளை சூழ்ந்த மழைநீர்: நுாதன போராட்டம்

Added : டிச 08, 2018

கடலுார்: வீடுகளைச் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் தேங்கி நிற்கும் மழைநீரில் நாற்காலியில் அமர்ந்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பள்ளத் தெருவுக்குட்பட்ட நடுத்தெரு, மேற்கு தெருவில் போதிய வடிகால் வசதியில்லாததால் மழை பெய்தால் அப்பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும்.மழைநீர் வடிகால் அமைக்க ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று நடுத் தெருவில், காலை 9:30 மணிக்கு வி.சி., ஒன்றிய பொருளாளர் சம்பத் தலைமையில், நடுத் தெருவில், தேங்கி நின்ற மழைநீரில் நாற்காலி போட்டு அமர்ந்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி சக்தி, ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேங்கி நிற்கும் மழைநீரை தற்காலிகமாக வெளியேற்றவும், அதன்பிறகு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். அதனையேற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு 10:30 மணிக்கு கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X