கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது

Added : டிச 08, 2018

சிதம்பரம்: பழிக்கு பழி வாங்க கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேரை சிதம்பரம் போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முத்துமாணிக்க நாடார் தெருவில் 6 பேர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர்.போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 24; முருகன் மகன் சதீஷ்குமார், மாசிலாமணி மகன் ராஜா, 24;, அண்ணா தெரு ராஜேந்திரன் மகன் மணிகண்டன், 32; பெருமாள் மகன் சுப்பு என்கிற கார்த்தி, 20; கண்ணன் மகன் அழுக்கு மூட்டை என்கிற விக்னேஸ்வரன் என தெரியவந்தது.மேலும் விசாரணையில், கடந்த ஜூலை 22ம் தேதி அதே பகுதியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது கிருஷ்ணன் மகன் வினோத்குமாருக்கும், ராஜாராம் மகன் தினகரன், 35; என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வினோத்குமார் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக தினகரன் நண்பர் சுரேைஷ கொலை செய்ய வினோத்குமாரின் தம்பி விஜயகுமார் தலைமையில் 6 பேரும் திட்டம் தீட்டியது தெரியவந்தது.உடன், போலீசார் வழக்குப் பதிந்து, விஜயகுமார், சதீஷ்குமார், மணிகண்டன், ராஜா, கார்த்தி ஆகிய 5 பேரை கைது செய்து, தப்பியோடிய கண்ணன் மகன் அழுக்குமூட்டை என்கிற விக்னேஸ்வரனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X