மாணவி மாயம் தந்தை புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி மாயம் தந்தை புகார்

Added : டிச 08, 2018

கடலுார்: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.கடலுார் அடுத்த திருவந்திபுரம், சாலைக்கரையைச் சேர்ந்தவர் ஞானமணி, 50; இவரது மகள் ேஹமலதா, 17; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின்படி, கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான ேஹமலதாவை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X