டாடா ஏஸ் மரத்தில் மோதல் ஒருவர் பலி: 6 பேர் காயம்  | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாடா ஏஸ் மரத்தில் மோதல் ஒருவர் பலி: 6 பேர் காயம்  

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: டாடா ஏஸ் மினி வேன் புளிய மரத்தில்மோதியதில் ஒருவர் இறந்தார். 6 பேர் காயமடைந்தனர்.திருக்கோவிலுார் அடுத்த அத்திப்பாக்கத்தை சேர்ந்தவர் நவீன்,26; கொத்தனார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கட்டட வேலை செய்தபோது, தவறி விழுந்து காலில் அடிப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்று அதிகாலை அவரும், உறவினர்களான சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த துரைராஜ்,50; சரவணன்,38; ரமேஷ்,42; கார்த்தி,24; பாலசுப்ரமணியம்,47; ஆகியோர் டி.என்., 03 டபுள்யூ 5400 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் மினி வேனில் வந்து கொண்டிருந்தனர்.டாடா ஏஸ் மினி வேனை சென்னையை சேர்ந்த ஆறுமுகம்,40; ஓட்டி வந்தார். காலை 5.00 மணிக்கு காணை அருகே வந்த போது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த மினிவேன், சாலையோர புளிய மரத்தில் மோதியது. அதில் படுகாயமடைந்த 7 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் துரைராஜ்,50; இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X