சொத்து தகராறு வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறு வாலிபர் கைது

Added : டிச 08, 2018

கண்டமங்கலம்: சொத்து தகராறில் ஏற்பட்டமோதல் காரணமாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த கெண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் தேவக்குமார் 32; தற்போது புதுச்சேரி அரியூரில் வசித்து வருகிறார். இவருக்கும், கெண்டியங்குப்பத்தை சேர்ந்த அவரது தாய் மாமன் பத்ராசலம் 60; குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக வழக்கு கோர்ட்டில் உள்ளது.இந்நிலையில் பிரச்னைக்குரிய நிலத்தில் கடந்த 5ம் தேதி மாலை, தேவக்குமார் ஏர் உழுதார். அதனை அறிந்த பத்ராசலம், அவரது மகன் கண்ணப்பன், மகள் கயல்விழி ஆகியோர் தேவக்குமாரை திட்டி தாக்கினர். அதில் படுகாயமடைந்த தேவக்குமார், அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து தேவக்குமார் கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, கண்ணப்பனை கைது செய்தனர். பத்ராசலம், கயல்விழி ஆகியோரை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X