அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திணறல்
அ.தி.மு.க., - தி.மு.க.,வில், 'சீட்' பிடிக்க போட்டி
கூட்டணிக்கு தொகுதி ஒதுக்குவதில்
3-வது அணி உருவாக வாய்ப்பு அதிகரிப்பு

லோக்சபா தேர்தலில் போட்டியிட, அதி.மு.க., - தி.மு.க.,வில், 'சீட்' பிடிக்க போட்டிநிலவுவதால், அக்கட்சிகளின் தலைமை திணறி வருகிறது. கூட்டணி கட்சிகள், அதிக இடங்களை கேட்பதால், தொகுதி ஒதுக்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக, மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

திணறல்அ.தி.மு.க.,  தி.மு.க.,போட்டி,கூட்டணி கட்சி, தொகுதி, சிக்கல், மூன்றாவது அணி

லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு, பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் துவக்கத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.தேர்தல் கமிஷன், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. நாடு முழுவதும், அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகிவருகின்றன.

தமிழகத்தில், அனைத்து கட்சிகளும், தனித்து போட்டியிட்டால், வெற்றி பெறுவது சிரமம் என்பதால், கூட்டணி அமைப்பதில், தீவிரம் காட்டிவருகின்றன.அ.தி.மு.க., பொதுச்செயலர், ஜெயலலிதா, தி.மு.க., தலைவர், கருணாநிதி மறைவுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தல் இது.தற்போதைய நிலையில், மக்களை கவரும் தலைவர்கள் இல்லாததாலும், மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே, அதிக இடங்களை பிடிக்க முடியும் என்பதை, அனைத்து கட்சிகளின் தலைமையும் உணர்ந்து உள்ளன.

எனவே, கொள்கை எதுவுமின்றி, அனைத்து கட்சிகளும், ரகசியமாக கூட்டணி பேச்சை துவக்கி உள்ளன. தி.மு.க., கூட்டணியில், தற்போது, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன.இந்த கூட்டணியில் இடம்பெற, ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தை கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சித்து

வருகின்றன.தி.மு.க., தலைமை, கூட்டணியில் எந்த கட்சிகளை சேர்ப்பது, அவற்றுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கு வது என்ற, குழப்பத்தில் உள்ளது.


கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு, ஒற்றை இலக்கத்தில், 'சீட்' ஒதுக்க, தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதிகமான தொகுதிகளில் தாங்களே போட்டியிட வேண்டும் என்றும்,அக்கட்சி கருது கிறது. தி.மு.க., சார்பில் போட்டியிட, அக்கட்சியில் ஏராளமானோர், 'சீட்' கேட்டு வருகின்றனர்.

தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதிகளை தவிர, மிச்சமுள்ள தொகுதிகளை மட்டுமே, கூட்டணிக்கு தரலாம் என்றும், கட்சி மேலிடத்தை அவர்கள் நச்சரித்து வருகின்றனர்.ஆனால், குறைந்தளவி லான தொகுதிகளை, காங்., உள்ளிட்ட கட்சிகள், ஏற்க மறுத்து வருகின்றன. இந்த குழப்பம் தீர்ந்து, கூட்டணி அமைவதற்குள், திடீர் திருப்பங்கள் வரலாம் என, தெரிகிறது.

இதற்கிடையில், பலமான கூட்டணி அமைக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்திருப்பதால், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. அக்கட்சி கூட்டணியில், பா.ஜ., இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. பா.ஜ., இடம் பெறும் நிலையில், மேலும் சில கட்சிகளும், இக்கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

இதனால், பா.ஜ., தலைமை, 20 லோக்சபா தொகுதிகளை, தங்களுக்கு ஒதுக்கும்படியும், அதில், பிற கட்சிகளுக்கு, 'சீட்' பங்கீட்டு தருவதாகவும் கூறி உள்ளது. இதற்கு, அ.தி.மு.க., தலைமை தயக்கம் காட்டினாலும்,பா.ஜ.,தலைமை நெருக்கடி கொடுத்து வருகிறது.பா.ஜ., தலைமை, அ.தி.மு.க., - புதிய தமிழகம் கட்சிகளோடு, ரஜினியையும் சேர்த்து, தேர்தலை சந்திக்க நினைக்கிறது.

ரஜினி கட்சி துவக்காவிட்டால்,தே.மு.தி.க., - பா.ம.க., போன்ற கட்சிகள் வந்தாலும், கூட்டணி யில் இணைத்துக் கொள்ள விரும்புகிறது. அதனால்

Advertisement

தான், அ.தி.மு.க.,விடம் இருந்து, 20 தொகுதிகளைகேட்கிறது.இரு கூட்டணி களிலும் இணைய, நிறைய கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால், அவற்றுக்கு சீட் ஒதுக்கு வதில் தான், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் சிக்கல் நிலவுகிறது.இதை பயன்படுத்தி, தினகரன், தனி கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார்.

இரு கூட்டணிகளிலும் இடம்பெற முடியாத கட்சிகள், தினகரனோடு கைகோர்த்து, தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தினகரனோடு கரம் சேர்க்க விரும்பாத கட்சிகள், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத, புதிய அணியை ஏற்படுத்தவும் காய் நகர்த்தி வருகின்றன. இதனால், தற்போதைய சூழலில், தமிழகத்தில், மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மூன்று அணிகளில், எந்த கட்சி, எந்த அணியில் இடம்பெறும் என்பது தான் இன்னும் உறுதியாக வில்லை. அனைத்து சிறிய கட்சிகளும், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் மறந்து, பெரிய கட்சி களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றன.ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், வரும், 11ல் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள், கூட்டணியை முடிவு செய்யக் கூடியதாக உள்ளன.எனவே, 11க்கு பின், கூட்டணி பேச்சு தீவிரமெடுக்கும் என, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப் படுகிறது.
-நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-டிச-201805:52:15 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>makkale panam thaan mukkiyam enraal intha theeya sagathikalai meendum konduvaangka ishtaththukkukudichchu kummaalama kidangka veettai manaivi kal kaappaaththunga sambadhippadhi ellaam (thinakkoliyo or mimonthalyo vaangiradhule 2/3 goes to TASMAAK IS TRUE ONLY DIFFERECE RICE USING COSTLY DRINKS POOR GOES TO TASMAAK , INRU KUDIKKAADHA ILANGYARKALE ILLE ENRU ORU SAMUTHAAYAM UNDAAKKINA PERUMAI KKE URIYAVANGKALE INTHA THIMUKA AND ADHIMUKA VE THAAN MAKKAL NAASAMAAPOKANUM ENBADHUTHAAN IVAALOTO KOLAKAI KUDICHCHUSAAGANUM ENBADHUTHAAN KADAMAI PONDAATTIPILLIKUTTIKALAI ADICHCHU UDHAICHCHU JAALIYAA IRUKKANUM ENBADHE KATTUPAADU , BEKKU MAKKALUM FRAUD S ENRU THERINJUM ITHUKALUKKKE MAARIMAARI VOTTU POTTUTTU NGE NNNU MULIKKURAANGKA

Rate this:
oce - tokyo,ஜப்பான்
12-டிச-201813:02:24 IST Report Abuse

oceஒரு குறிப்பிட்ட கட்சியில் சேருபவர்களுக்கு முதலில் சொல்லித்தரும் வித்தை எதிலும் மாட்டாமல் திருடுவது எப்படி. மாட்டினால் செய்திகளில் வெளிவராதபடி ரகசியமாக உரியவர்களிடம் சென்று காலில் விழுவது எப்படி. மற்ற கட்சிகளில் அந்த கொள்கை இல்லை. டோக்கன் கொடுத்து வாக்கை திருடுகிறார்கள்.

Rate this:
bal - chennai,இந்தியா
12-டிச-201812:53:10 IST Report Abuse

balகண்டிப்பா மக்கள் இருபது ரூபாய்க்கு தான் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவற்குதான் வோட்டு போடுவார்கள்...மக்கள் மனதில் பணம் மட்டுமே பிரதானமாக உள்ளது.. .ஜன நாயகம் பற்றிய சிந்தனை உயித்தெழ இன்னொரு பாரதியார், வஉசி காமராஜர் வர வேண்டும்...விழிப்புணர்வு கொண்டு வர... அதுவரை இந்த பணம், அராஜகம், கூச்சல்தான் ஜனநாயகம் தமிழ் நாட்டில்.

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X