ஏழு கடைகளில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏழு கடைகளில் திருட்டு

Added : டிச 08, 2018

மறைமலைநகர்: காட்டாங்கொளத்துாரில், தேசிய நெடுஞ்சாலையின் அருகில், ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நடைபயிற்சி சென்றனர். அப்போது, ஏழு கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.இதுபற்றி, கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின், கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, மேற்கண்ட கடைகளில், 5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.இது குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X