கத்தியை காட்டி வழிப்பறி இருவர் போலீசில் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி வழிப்பறி இருவர் போலீசில் சிக்கினர்

Added : டிச 08, 2018

காஞ்சிபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம், கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் அடுத்த, முசரவாக்கம் பெண் கொலை சம்பந்தமாக போலீசார், சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது, இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரிக்கும் போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.அவர்களிடம், தீவிரமாக விசாரிக்கும் போது, ஆனந்தன், 20; சந்தீப், 16, இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து, 10 விலை உயர்ந்த செல்போன்கள், கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள், இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றி, இந்த வழிப்பறி வேலையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருவரையும் காஞ்சி தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X