4 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

Added : டிச 08, 2018

எண்ணுார்: எண்ணுாரில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு குடிசைகள் எரிந்து நாசமாகின.எண்ணுார், காசி விஸ்வநாதர் கோவில் குப்பத்தில் வசித்து வருபவர், ரத்தினவேல், 50. இவர், நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் தன் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு,12:00 மணிக்கு, திடீரென குடிசை தீப்பிடித்தது. குடிசை பற்றி எரிவதை பார்த்த ரத்தினவேல், தன் குடும்பத்திரை வெளியேற்றி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைக்க முயன்றனர்.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர், எண்ணுார் தீயணைப்பு படை வீரர்கள், 10க்கும் மேற்பட்டோர், 1 மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில், நான்கு குடிசை வீடுகள் மற்றும் துணி, உடைமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.இந்த, தீ விபத்து குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X