மெட்ரோ நிலையம் அமைக்க ஆழ்வார்பேட்டையில் எதிர்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

மெட்ரோ நிலையம் அமைக்க ஆழ்வார்பேட்டையில் எதிர்ப்பு

Updated : டிச 09, 2018 | Added : டிச 09, 2018 | கருத்துகள் (3)
 மெட்ரோ நிலையம் அமைக்க ஆழ்வார்பேட்டையில் எதிர்ப்பு

சென்னை: டி.டி.கே.சாலையில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை, சுரங்கப்பாதையிலும், கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மேம்பாலத்திலும், மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில், ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலை, பாரதிதாசன் சாலை சந்திப்பில், பாரதிதாசன் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவது குறித்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும், வியாபாரிகளுக்கும், 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.இதற்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மெட்ரோ ரயில் நிலையம் வருவதால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகள், வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை கைவிட வேண்டும்; திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில், அப்பகுதிவாசிகளுக்கு இடையூறு இன்றி, ரயில் நிலையம் அமைக்க வேண்டும்.டி.டி.கே.சாலை, டிமான்டி காலனி அருகே உள்ள அரசு நிலத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X