பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆலோசனை
*20 பல்கலைகளுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து
*கல்வி தரத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

புதுடில்லி:மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், கல்வி நிறுவனங்கள், தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதில் ஆரோக்கிய மான போட்டியை உருவாக்கும் வகையிலும், சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 ஆலோசனை,கல்வி தரம் ,மத்திய அரசு, திட்டம், பல்கலை,

நாடு முழுவதும் செயல்படும், அரசு, தனியார் பல்கலைகள், மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன. பல்கலைகள் நேரடியாகவும், அதன் உறுப்பு கல்லுாரிகள் மூலமாகவும், பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கல்வித்துறையில் சிறந்து செயல்படுவதோடு, மாணவர்களுக்கு தேவை யான உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி துறைக்கு தேவையான அம்சங்களை ஒருங்கே பெற்ற பல்கலைகளை தேர்வு செய்து, அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்பு குழுஅந்த வகையில், கல்வித்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்களை நியமித்து, சிறப்பு குழு அமைத்து, அவர்கள் மூலம், பல்கலைகளை மத்திய அரசு தேர்வு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக,

மும்பை, டில்லியில் செயல்படும், ஐ.ஐ.டி.,க்கள் மற் றும் பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் மையம் ஆகிய அரசு நிறு வனங் களுக்கு, சமீபத்தில் இந்த அந்தஸ்து வழங்க பட்டது.அத்துடன், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணிப்பால் பல்கலை மற்றும் விரைவில் துவங்கப் பட உள்ளரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பல்கலை ஆகியவற்றிற்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில், உள் கட்டமைப்பு, ஆய்வு பணிக்கு தேவையான அம்சங்கள் மற்றும் மாணவர் களின் திறனை மேம்படுத்தும் அம்சங்கள் இருப்ப தால், இந்த அந்தஸ்து வழங்கப் பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடவடிக்கைகள்இந்நிலையில், நாட்டில் செயல்படும், 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும், 10 தனியார் கல்வி நிறுவனங் களுக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிபுணர் குழு, தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பட்டியல் வெளியானதும், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழுகூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். அதன் பின், அதிகார பூர்வ மாக, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:சிறப்பு அந்தஸ்து கோரி, இதுவரை, 114 கல்வி நிறுவனங் கள் விண்ணப்பித்துள்ளன.

அவற்றில், பல்வேறு, இந்திய தொழில்நுட்ப

Advertisement

கல்வி நிறுவனம் எனப்படும், ஐ.ஐ.டி.,க்கள், என்.ஐ.டி.,எனப்படும், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங் களும் இடம் பெற்றுள்ளன.


இவற்றில், தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அதிலும், முன்னிலை யில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்கு வாய்ப்பு?ஐ.ஐ.டி., சென்னை, டில்லி பல்கலை, ஜாதவ்பூர் பல்கலை, அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., ேகாரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு, விரைவில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்கும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
09-டிச-201818:42:01 IST Report Abuse

jaganதேவையில்லை . இந்தியர்களுக்கு பிடித்தது, இட ஒதுக்கீடு எனும் சோம்பேறித்தனமான, அரசு அங்கீகரிக்க பட்ட திருட்டே ...எனவே இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி 200 % ஆக்க வேண்டும்...

Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
09-டிச-201816:32:25 IST Report Abuse

M S RAGHUNATHANIf this is to be seriously atted, please abolish reservation in recruitment of teachers at all levels without giving any room for corruption or agitation by any body .

Rate this:
jagan - Chennai,இந்தியா
09-டிச-201822:01:49 IST Report Abuse

jaganரொம்ப பீட்ரு வேண்டாம்....லூசு மாதிரி இருக்கு ...

Rate this:
rajan - erode,இந்தியா
09-டிச-201814:10:12 IST Report Abuse

rajanரிலையன்ஸ் பல்கலை என்னாச்சு?????

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X