கொத்தனார் கொலை: 2 பெண்கள் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொத்தனார் கொலை: 2 பெண்கள் கைது

Added : டிச 09, 2018
Share

மானாமதுரை:திருப்புவனம் அருகே புலவர்சேரியில் முன்பகை காரணமாக கொத்தனார் சக்திவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்புவனம் அருகே புலவர்சேரியில் முன்பகை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொத்தனார் சக்திவேல் என்பவர்கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குதொடர்பாக நடுக்னேந்தலைச் சேர்ந்த சுப்பையா மகள் தனம் திருப்பாச்சேத்தி போலீசில் சரணடைந்தார்.அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவரது தாய் மரகதம்65, அவரதுஉறவினர்கள் முத்துவீரு,பாலுச்சாமி,நாகு உட்பட 7 பேர் மீது பழையனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தனம் மற்றும் மரகதத்தைகைது செய்தனர். மரகதத்திடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இறந்து போன சக்திவேலின் பணம் ரூ.85 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.தப்பியவர்களை பிடிக்க டி.எஸ்.பி.,சுகுமாறன் தலைமையில்இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X