பல கட்சிகள் அழைப்பு: த.மா.கா., தவிப்பு!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பல கட்சிகள் அழைப்பு: த.மா.கா., தவிப்பு!

Added : டிச 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


அரியலுாரில் நடந்த, த.மா.கா., பொதுக்கூட்டம், 'சக்சஸ்' ஆகியுள்ளதால், அக்கட்சி, அ.தி.மு.க., - தி.மு.க., -அ.ம.மு.க., - பா.ஜ., ஆகியவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில், யாருடன் கூட்டணி என்ற, கேள்விக்கான விடையை, புத்தாண்டில் கூடுகிற பொதுக்குழுவில், த.மா.கா., தலைவர் வாசன் அறிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில், த.மா.கா., இடம் பெற்றது. அக்கூட்டணியே, தேர்தலுக்கு பின் காணாமல் போனது.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, த.மா.கா., பேச்சு நடத்தியது. தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியிடம், டில்லி மேலிட தலைவர்கள் சிலர், த.மா.கா.,வை சேர்க்க தடை போட்டனர்.தற்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், த.மா.கா.,தலைவர் வாசனும் நண்பர்களாக உள்ளனர். நிர்ப்பந்தம்வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., சேருவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல, அ.தி.மு.க., அல்லது ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும், த.மா.கா.,வில் சிலர் விரும்புகின்றனர்.யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, வாசன், தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறது என்றால், உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், த.மா.கா.,வின்,ஐந்தாம் ஆண்டுதுவக்க விழா பொதுக்கூட்டம், அரியலுாரில் நடந்தது. அதில், 25 ஆயிரம் பேர் பங்கேற்றதாக, உளவுத்துறை கணக்கெடுத்துள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியின் கவனமும், த.மா.கா., மீது திரும்பியுள்ளது.ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், த.மா.கா., துணைத் தலைவர் ஒருவரிடம், அரியலுார் கூட்டம் பற்றி பாராட்டி பேசியுள்ளார்.அறிவிப்புஅதேபோல, சென்னை விமான நிலையத்தில், த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரிடம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும், 'எங்களுடன் கூட்டணி அமைக்க வாருங்கள்' என, அழைப்பு விடுத்துள்ளனர்.தி.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலரும், த.மா.கா., துணை தலைவர் தங்கத்தை தொடர்பு கொண்டு, 'அரியலுார் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி விட்டீர்கள்' என, பாராட்டி உள்ளனர்.'

கஜா' புயலால் பாதித்த, டெல்டா மாவட்டத்தை சேர்ந்த பலர், அரியலுார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தகவல் அறிந்து, அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர் தினகரனும், முன்னாள் எம்.எல்.ஏ.,வை துாது அனுப்பியுள்ளார்.இப்படி, அனைத்து கட்சிகளின் கவனத்தை, த.மா.கா., கவர்ந்துள்ள நிலையில், 20 தொகுதிகளின் இடைத்தேர்தலில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்வியும், லோக்சபா தேர்தலில், யாருடன் கூட்டணி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த கேள்விக்கான விடையை, புத்தாண்டில் கூடுகிற, த.மா.கா.,பொதுக்குழுவில், வாசன் அறிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-201807:40:24 IST Report Abuse
Bhaskaran திமுகா அதிகம்போனால் ரெண்டு சீட்க்கொடுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kaliraja Thangamani - Chennai,இந்தியா
09-டிச-201806:29:53 IST Report Abuse
Kaliraja Thangamani ஜி கே வாசன் , மதிப்பு மிக்க தலைவராக வளர்வது , தமிழக அரசியல் வரலாறில் நடக்கும் மிக நல்ல விஷயம் ஆகும். அவர் தெளிவான போக்குடன் , தைரியமாக , தனித்து முடிவெடுக்கும் ஆற்றல் பெற்றவர். இந்த விஷயத்தில் அவர் தந்தையை மீறிய தனயன் என்பதே என் கருத்து. அவர் வளரவேண்டும். அது தமிழகத்துக்கு நன்மை அளிக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X