அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., அணி செயலருக்கு மந்திரிகள் போட்டி

Added : டிச 09, 2018
Advertisement

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பதவிக்கு, பல்முனை போட்டி நிலவுவதால், முடிவெடுக்க முடியாமல், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுமாறி வருகின்றனர்.தமிழக அரசியல் கட்சிகளில், முதல் முறையாக, தகவல் தொழில்நுட்ப அணியை, அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா உருவாக்கினார். அவர் இருந்த வரை, அந்த அணி சிறப்பாக செயல்பட்டது. 2014 லோக்சபா தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற, தகவல் தொழில்நுட்ப அணி பெரிதும் உதவியது.

அப்போது, அந்த அணியின் செயலராக, அஸ்பயர் சுவாமிநாதன் இருந்தார். அவர் நீக்கப்பட்டு, ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். ஜெ., மறைவுக்கு பின், கட்சியில் பிளவு ஏற்பட்டதும், சுவாமிநாதன், ராமச்சந்திரன் ஆகியோர், பன்னீர் அணிக்கு சென்றனர்.உடனே, சசிகலா அணி சார்பில், புதிய தகவல் தொழில்நுட்ப அணி செயலராக, ராஜ்சத்யன் நியமிக்கப்பட்டார். அணிகள் இணைந்ததும், ஜெ., நியமித்த நிர்வாகிகளே தொடர்வர் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது செயலராக, ராமச்சந்திரன் உள்ளார்.அவரை நீக்கிவிட்டு, ராஜ்சத்யனை நியமிக்க, முதல்வர் பழனிசாமி தரப்பு விரும்புகிறது. பன்னீர்செல்வம் தரப்போ, ராமச்சந்திரனை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது.இந்த சூழ்நிலையில், முன்னாள் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பதவியை பெற, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, இருவரும் முடிவெடுக்க முடியாமல், தவித்து வருகின்றனர். செயலர் பதவிக்கு, கடும் போட்டி நிலவுவதாலும், செயலர் பதவியை விரும்புவோர் பின்னால், நிர்வாகிகள் அணிவகுப்பதாலும், கோஷ்டி பூசல் அதிகரித்து விட்டது.இதனால், தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடு முடங்கி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X