பதிவு செய்த நாள் :
அலறல், ரெய்டு, காங்., தலைவர்கள்

புதுடில்லி:காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கு நெருங்கிய நண்பரான, ஜக்திஷ் சர்மாவின் வீட்டில், அமலாக்கத் துறையினர் நேற்று, 'ரெய்டு' நடத்தினர்.அடுத்தடுத்து தொடரும் ரெய்டுகளால், வாத்ராவுக்கு நெருக்கமானோர் அச்சமடைந்துள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், பல்வேறு வழக்குகள், காங்கிரசுக்குநெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்கும் போது, அவற்றை விற்ற நிறுவனங்களிடம், முறைகேடாக பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கு நெருங்கிய நண்பர்கள் மூன்று பேரின் அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். தலைநகர் டில்லி மற்றும் பெங்களூரில் நடந்த சோதனைகளில், முக்கிய ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முக்கிய ஆவணங்கள்


இந்நிலையில், ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய நண்பரும், காங்கிரசை சேர்ந்தவருமான, ஜக்திஷ் சர்மா வீட்டில், நேற்று அமலாக்கத் துறையினர், திடீர் சோதனை நடத்தினர். இதிலும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்காக, ஜக்திஷ் சர்மாவையும், அமலாக்கத்

துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து, ஜக்திஷ் சர்மாகூறியதாவது: ராபர்ட் வாத்ரா மீது, பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. அவரை ஒழித்து கட்ட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சி செய்து வருகிறது.தற்போது, என் வீட்டில், ரெய்டு நடக்கிறது. எங்கு ரெய்டு நடத்தினாலும், அமலாக்க துறைக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ தளவாடங்கள் ஒப்பந்தத்தில் கமிஷன் கைமாறியது தொடர்பாக, ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கமானோரிடம், அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை.இரண்டு நாட்களாக, அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில், வாத்ரா தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ள தாகவும், அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாத்ராவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த ஆதாரங்கள் அவை என்றும் கூறினர். அமலாக்கத் துறையினரின் அடுத்தடுத்த, ரெய்டு களால், சோனியா மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்க மானோர்பீதியில் உள்ளனர்.இந்த

விவகாரத்தில், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கமான கூறப்படுகிறது.
சமீபத்தில், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர், மோதிலால் வோரா, ஹரியானா முன்னாள் முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவ்வழக்கில், சோனியா, அவரது மகனும், காங்., தலைவருமான ராகுல் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஒப்பந்தம்


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது, வி.வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்க, இத்தாலியைச் சேர்ந்த, 'பின்மெக்கானிகா' நிறுவனத்தின், துணை நிறுவனமான, பிரிட்டனை சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதில், 423 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதை அடுத்து,ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகனாக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை, துபாயில் இருந்து, இந்தியாவுக்கு நாடுகடத்தி, கைது செய்தது. அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த

வழக்குகளால், காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, ராணுவ தளவாடங்கள் தொடர்பான வழக்கில், சோனியா வின் மருமகன் ராபர்ட் வாத்ரா சிக்கியிருப்பதால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பா.ஜ.,வுக்கு பயம்!


காங்கிரசின் பலத்தை பார்த்து, பா.ஜ., பயப்படுகிறது. எங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானோர் வீடுகளில், 'ரெய்டு' நடக்கிறது. தேர்தல்களில் தோற்று விடுவோம் என்பதால், பா.ஜ., பீதியில் உள்ளது.
அபிஷேக் மனு சிங்வி
செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்

அனுமதியின்றி, 'ரெய்டு'


சோனியா மருமகன், ராபர்ட் வாத்ராவின் வழக்கறிஞர், சுமன் கேதான் நேற்று கூறியதாவது: டில்லியில், ராபர்ட் வாத்ராவின் அலுவலகத்தில், ரெய்டு நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அங்கிருந்த ஊழியர்களை, ஓர் அறையில் பூட்டி வைத்துள்ளனர். ரெய்டு நடத்துவதற்கு முறையான அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
நான்கரை ஆண்டுகளாக, இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறையினர் ஒரு சிறு துரும்பைக் கூட கண்டுபிடிக்கவில்லை. ராபர்ட் வாத்ராவுக்கு எதிராக, போலி ஆதாரங்களை, அமலாக்கத் துறையினர் தயாரித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-டிச-201821:24:17 IST Report Abuse

SIVA. THIYAGARAJANயாராக இருந்தாலும் விடாமல் பிடித்து போடுங்க. திருடன்களை பிடிங்க . ஊழலை ஒழிக்கவும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-டிச-201819:11:11 IST Report Abuse

Pugazh Vபாகிஸ்தானின் தொழில் கள்ள நோட்டு அடிப்பதாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் உலகிலேயே பலவீனமான இந்திய நோட்டையா அடிப்பார்கள்? கேனத்தனமான கற்பனை. தென்னையில் தேள் கொட்டி பனைமரத்தில் நெறி கட்டுதாம். இந்தியா வில் பணமதிப்பிழப்பு பண்ணினதும் பாகிஸ்தானில் பிரச்னையாம்..ஹா ஹா ஹா. செம காமெடி

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
09-டிச-201822:25:44 IST Report Abuse

anbuபலவீனமான இந்திய நோட்டையா அடிப்பார்கள் என்ற உமது கருத்து மோடிமீது உள்ள வெறுப்பையும் பாகிஸ்தான் மீதுள்ள பாசத்தையும் காட்டுகிறது. உமது பச்சை பாசத்தின் வெளிப்பாடு காரணமாக பச்சை குழந்தைக்கு கதை சொல்வது போல கருத்து வேண்டாம். இந்தியாவை பலவீனப்படுத்தவே கள்ள நோட்டு அடித்து பயங்கரவாதிகளை பலப்படுத்துகிறது. இலங்கையிலும் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் பிடிபட்டது தெரியாதோ?மற்றவர்களை கிணற்று தவளையாக எண்ணவேண்டாம். ...

Rate this:
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
09-டிச-201818:07:55 IST Report Abuse

Chakkaravarthi Skஉத்தமர்கள் தங்கள் "கைகளை" விரித்து காண்பித்து தங்களுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டியது தானே மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயமிருக்கும் என்ற தமிழ் பழமொழி ஹிந்து முஸ்லீம் கிறித்துவர் என்ற வித்தியாசம் இல்லாமால் உண்மையே.தான். பாகிஸ்தான் ஐ குறை சொன்னால் ஏன் சிலருக்கு கோபம் வருகிறது என்பது புரிந்து கொள்ள க்கூடியதே ஆனால் வெறும் பேச்சுக்கு நான் இந்தியன் இந்தியாவில் வாழ்கிறவன் என்றெல்லாம் பேசி விட்டு எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிர்ப்பான நாட்டையே ஆதரிப்பது தான் தேச பக்தியோ? அல்லது என்ன பக்தியோ? எல்லாம் வல்ல இறைவன் இந்த குறுகிய மனம் கொண்ட மனிதர்களுக்கு என்று தான் புரிந்து கொள்ளும் மன நிலையை கொடுப்பானா? என்று இறைஞ்சுகிறேன். கொலை செய்வது கூட்டம் கூட்டமாக மக்களை குண்டு வைத்து அழிப்பது குழந்தைகள் பெண்கள் மற்றும் வாழ வேண்டிய வயதில் உள்ள இளைஞர்கள் பெண்கள் கொல்வது தான் லட்சியம் என்றால் நிச்சயம் அது ஒரு நல்ல வழி அல்ல அதை புனிதமான வார்த்தைகளால் ஒரு போர் என்று சொல்வதும் கடவுளுக்கும் கடவுளை உணர்த்த வந்த மதத்திற்கும் பழி ஏற்படுத்துகின்ற சிறுமைப்படுத்துகின்ற செய்கையே? இந்த கருத்தை மறுக்க முடியுமா? நிச்சயம் வருந்துகிறேன் இந்த முறையினால் எப்பொழுதும் இறைவன் சந்தோஷமோ அல்லது திருப்தியோ அடைவதில்லை. தன உயிரை கொடுத்து பிற உயிரை வாழ வைப்பது பிறர் நலன்களை முன்னிட்டு தியாகம் செய்வது போன்ற நற்காரியங்களினால் நாம் இறைவனை சந்தோஷ் படுத்த முடியும் உதாரணத்திற்கு எங்கேயோ வெளி நாட்டிலிருந்து வந்து கொல்கத்தாவில் எளியவர்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் சேவை செய்ய தன்னுடைய முழ வாழ் நாளையே அர்ப்பணித்த அன்னை தெரசா இந்த மாதிரி முடிவெடுத்த தருணம் அவர் இளம் பெண்ணாக இருந்த போது தான் உண்டு தன திருமணம் தன் குடும்பம் என்று இல்லாமல் பிறர் வாழ்வை அவர் கடைத்தேற்றினார் அவரை வணங்கலாம். தீவிர வாதம் குண்டு வைத்து கொல்வது இதை எல்லாம் செய்கின்ற மாக்களை நாம் கொண்டாடவா முடியும்? கொலை செய்வதின் மூலம் எப்பொழுதும் யாரும் உள் மனதில் சந்தோஷத்தையோ நிம்மதியையோ அடைய முடியாது இதற்காகவா பிறந்தார்கள் பிறரை கஷ்டப்படுத்துவதும் கொல்வதும் இதனால் கடவுள் திருப்தி அடைகிறார் என்றால் அந்த கடவுளை நிச்சயம் பாராட்ட முடியாது தான் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு நிச்சயம் கடவுளிடம் இருக்க முடியாது. ஏனென்றால் கடவுள் அன்பு மயமானவர். கருணை கொண்டவர். தன குழந்தைகளை நிச்சியம் கடவுள் வழி காட்டி வாழ வைப்பவர் அதனால் தான் கிறித்துவர்கள் அவரை "நல்ல மேய்ப்பன்" என்று சொல்கிறார்கள். அழிவிற்க்காக செய்கின்ற செலவை ஆக்கத்திற்காக செய்ய ஏன் முயலக்கூடாது? குண்டு வைத்து கூட்டம் கூட்டமாக கொள்கிறார்களே? இவர்களால் குழந்தை இல்லை எங்களுக்கு ஒரு குழந்தையை கொடு என்று கேட்டால் கொடுக்க முடியுமா?. அழிப்பது என்பது ஒரு விதமான மன நோய் அவ்வளவு தான். அழிப்பது மட்டுமே அவர்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கும். அதற்கு கடவுளையும் மதத்தையும் காரணமாக சொல்கிறார்கள். யானை ஒரு மிருகம் அதற்கு மதம் பிடிப்பது இயற்கையான ஒரு நிலை. ஆனால் மனிதனுக்கு மதம் பிடித்தால் அதன் விளைவுகள் ஆராய்ச்சி அழிவு அழிவு தான் பிறரை அழித்து தான் மட்டும் வாழ்வதனால் என்ன சந்தோஷத்தையும் திருப்தியையும் அடைய நினைக்கிறார்க்ளோ? .

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X